Random Posts

Header Ads

விவசாயிகளுக்கான கிரிஷி உடான் 2.0 திட்டம்! 29 மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது!!

 


விவசாயிகளுக்கான கிரிஷி உடான் 2.0 திட்டம்! 29 மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது!!


விவசாயிகளுக்கான கிரிஷி உடான் 2.0 திட்டமானது, தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா எம் சிந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவையில் வழங்கிய தகவல்கள் பின்வருமாறு. 



விமானப் போக்குவரத்து மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் 27 அக்டோபர் 2021 அன்று கிரிஷி உடான் திட்டம் 2.0 அறிவிக்கப்பட்டது.

 

நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளை மேம்படுத்துவதிலும், முக்கியமாக மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து அழுகக்கூடிய உணவுப் பொருட்களை விரைவாக கொண்டு செல்வதிலும் இத்திட்டம் கவனம் செலுத்தி வருகிறது.

 

வடகிழக்கு, மலைப்பாதைகள் மற்றும் பழங்குடியினர் பகுதியை மையமாகக் கொண்ட 25 விமான நிலையங்கள் மற்றும் பிற பகுதிகளில் 28 விமான நிலையங்கள் மீது இத்திட்டம் முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது. 



இந்திய சரக்குகளின் தரையிறக்கம், வாகன நிறுத்தம் மற்றும் பாதை வழிச் செலுத்துதல் வசதிக் கட்டணங்கள் போன்றவற்றை கிருஷி உடான் திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முழுமையாக தள்ளுபடி செய்கிறது. 

 

கிருஷி உடான் திட்டம் என்பது எட்டு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒன்றிணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். விமானப் போக்குவரத்து அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம், மீன்வளத் துறை அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில், வர்த்தகத் துறை அமைச்சகம், பழங்குடியினர் துறைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. 

 


29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் க்ரிஷி உடான் 2.0 திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளன. தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, லடாக், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் ஆகும். 


மேலும் படிக்க....


விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும்!!


பருவம் தவறிய மழை விவசாயிகளுக்கு எச்சரிக்கை! தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!


கருப்புக்கவுனி நெல் இரகம் சாகுபடி பற்றிய முழு தொகுப்பு! வெற்றி கன்ட விவசாயியின் அனுபவங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments