தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்மென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக தென் மண்டல வானிலை மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மன்னர் வளைகுடா பகுதியில் வளிமண்டல (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தென்
தமிழக மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை,
மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல்
மிதமான மழை பெய்யகூடும்.
பெரும்பாலும் வறண்ட வானிலை
12.02.2022
டெல்டா
மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி,
கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழக மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை,
மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்யும்.
ஏனைய
மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை
13.02.2022
13ம் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு
சென்னையைப்
பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச
வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு
எச்சரிக்கை
மன்னார்
வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்
வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும்
படிக்க....
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு! வரும் 10ந்தேதி வரையிலான வானிலை அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...