Random Posts

Header Ads

சம்பா நெல் அறுவடைக்கு பிறகு தஞ்சையில் 425 எக்டர் உளுந்து சாகுபடி! மாவட்ட ஆட்சியர் நேரடியாக திடீர் ஆய்வு!!



சம்பா நெல் அறுவடைக்கு பிறகு தஞ்சையில் 425 எக்டர் உளுந்து சாகுபடி! மாவட்ட ஆட்சியர் நேரடியாக திடீர் ஆய்வு!!


மதுக்கூர் வடக்கு கிராமத்தில் நஞ்சையில் உளுந்து சாகுபடி குறித்து மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் திடீர் ஆய்வு, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் தஞ்சை நஞ்சையில் உளுந்து சாகுபடி எனும் சிறப்பு திட்டம் 500 எக்டர் பரப்பில் செயல்படுத்திட இலக்கு வழங்கப்பட்டுள்ளது. 


தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் 70 சதவீத பரப்பில் சம்பா நெல் அறுவடை முடிவுற்ற நிலையில் நஞ்சையில் உளுந்து சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் சாகுபடி முடிவுற்ற பின் செலவின்றி உளுந்து சாகுபடி மூலம் விவசாயிகள் வருமானம் பெறவும் மண் வளத்தை பெருக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



மதுக்கூர் வட்டாரத்தில் இதுவரை 425 எக்டர் வரை நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் மதுக்கூர் வட்டாரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மதுக்கூர் வடக்கு கிராமத்தில் மூர்த்தி மற்றும் முன்னோடி விவசாயிகளுடன் நஞ்சை உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள 50 எக்டர் பரப்பினை நேரடியாக பார்வையிட்டு உளுந்து சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து  கலந்துரையாடினார்.





தற்போது அறுவடை முடிய உள்ளதால் மீதமுள்ள பரப்புகளில் விவசாயிகளை ஊக்குவித்து தரிசு இன்றி உளுந்து சாகுபடி மேற்கொள்ள வேளாண் உதவி அலுவலர்களை கேட்டுக்கொண்டார். நீண்ட காலமாக தரிசாக இருந்து தற்போது நிலத்தை சீர் செய்து உளுந்து சாகுபடிக்கு கொண்டுவந்துள்ள மதுக்கூர் வடக்கு மகேஸ்வரன் வயலில் உளுந்து விதைப்பு பணி ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரும் விவசாயிகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு வயலில் உளுந்து விதைத்து சாகுபடி பணியினை துவக்கி வைத்தார். 



இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வின்போது பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் வட்டாட்சியர் கணேஸ்வர்  மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வேளாண் அலுவலர் சாந்தி வேளாண்மை உதவி அலுவலர்கள் பூமிநாதன் கார்த்திக் மற்றும் முருகேஷ் ஆகியோர் கள ஆய்வுக்கான  பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா, ராஜு ஐயா மணி கிருஷ்ணமூர்த்தி, பவித்ரா ஆகியோர் செயல்விளக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்,

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு உழவு பணியை மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு ரூ.400 என வாடகை நிர்ணயம்!!


PM Kisan விதிகளில் மாற்றம் 11வது தவணை இனி இறந்த விவசாயிகளின் பெயரில் கிடைக்காது!!


5000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கன மழையினால் பாதிப்பு! வேதனையில் விவசாயிள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments