Random Posts

Header Ads

நிலக்கடலைப் பயிரில் புரோடினியா புழுவின் தாக்குதல் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?




நிலக்கடலைப் பயிரில் புரோடினியா புழுவின் தாக்குதல் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலக்கடலை வளர்ச்சிப் பருவத்தில் பயிரில் தற்பொழுது புரோடினியா புழுவின் தாக்குதல் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்திடக் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்துப் புதுக்கோட்டைவேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 

புரோடினியா புழுக்கள் நீளமாக, பருத்து, உடம்பில் பழுப்பு நிறத்திலான புள்ளிகளுடன் காணப்படும். தொடக்க நிலையில் புழுக்கள் கூட்டமாக இலைகளைச் சுரண்டித் தின்னும். இப்புழுவின் தாக்குதல் அதிகமாகும் போது இலைகளில் நரம்பு மட்டுமே இருக்கும். 



வளர்ந்த புழுக்கள் பகலில் செடிகளின் அருகே மண்ணுள் வாழும். இரவில் வெளியில் வந்து இலைகளை உட்கொண்டு சேதம் விளைவிக்கும். புரோடினியா புழுவின் தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினைக் கடைப்பிடித்து கட்டுப்படுத்திட வேண்டும். நிலக்கடலை பயிரிடுவதற்கு முன்னதாகக் கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூண்டுப் புழுக்களை அழிக்கலாம். 


ஆமணக்குச் செடியினை வயலின் ஓரத்தில் வளர்த்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து விளக்குப் பொறிகள் வைத்துத் தாய் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம்.

 

முட்டைக் குவியல்களையும் இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு, பத்து இடங்களில் பறவை இருக்கைகள் அமைக்கலாம். என்.பி.வி. வைரஸ் என்ற நச்சுயிரி (ஸ்போடாப்டிரா) ஒரு ஏக்கருக்கு 100 புழுக்கள் சமன் எனும் அளவில் ஒட்டும் திரவம் கொண்டு மாலை வேளையில் தெளித்து கட்டுபடுத்தலாம். 



மேலும், நூறு மீட்டர் பாத்தியில் எட்டு முட்டைக் குவியல்கள் அல்லது செடிக்கு இரண்டு புழுக்கள் இருந்தால் இப்புழுவின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையை எட்டி விட்டது எனஅறியலாம்.

 

எனவே தாக்குதல் பொருளாதாரச் சேத நிலைக்கு மேல் தென்பட்டால், இளம் புழுக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஸ்பினோசாடு 45 எஸ்.சி. 80 மி.லி., புரோபினோபாஸ் 50 இ.சி. 500 மி.லி., மோனோகுரோட்டபாஸ் 36 எஸ்.எல். 600 மி.லி. இமாமெக்டின் பென்சோயேட் 100 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சி மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


ஏக்கர் ஒன்றுக்கு அரிசித் தவிடு ஐந்து கிலோ, வெல்லம் அரை கிலோ, தையோடிகார்ப் 200 கிராம் இவற்றுடன் மூன்று லிட்டர் நீர் சேர்த்த கலவையை நச்சுக் கவர்ச்சி உணவுருண்டைகளாகச் செய்து மாலை வேளையில் வயலிலும் வரப்பிலும் வைத்து வளர்ந்த புழுக்களைக் கவர்ந்து கட்டுப்படுத்தலாம். 



இது தவிர, ஏக்கர் ஒன்றுக்கு200 கிராம் தையோடிகார்ப் 75 சத டபிள்யு.பி. அல்லது200 மி.லி. நோவலூரான் 10 இ.சி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்தும் வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

 

புரோடினியா புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்து நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது! பயறு வகை பயிரிட்டு மண்வளம் காக்கலாம்!!


பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம் மற்றும் மேலாண்மை முறைகள்!!


கோவை வேளாண் பல்கலை கழகம் சார்பில், 17 புதிய வகை பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments