Random Posts

Header Ads

மானாவாரி விவசாயிகளின் வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்க பாரம்பரிய ரகங்கள் சாகுபடி!!



மானாவாரி விவசாயிகளின் வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்க பாரம்பரிய ரகங்கள் சாகுபடி!!


வேளாண் சந்தையில் குறைந்த பட்ச விலை நிர்ணயமும் தேவைப்படும் மாற்றுக் கொள்கைகளும் கடந்த சில ஆண்டுகளாக வேளாண் துறையில் மற்றும் வேளாண் விளை பொருட்கள் சந்தையில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு முக்கிய பிரச்சனையாக உருமாறி வருகிறது. 


குறிப்பாக முன்பு வேளாண் சந்தையில் கடுமையான விலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும் விவசாயிகளுக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவும், அவர்கள் கடனாளியாவதை தடுக்கவும் உருவாக்கப்பட்ட இந்த குறைந்தபட்ச ஆதரவு அல்லது குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்றவை சில பயிர்களில் மட்டும் பசுமை புரட்சியின் போது நடைமுறைப்படுத்தப்பட்டபோது மிகப்பெரிய அளவில் அரிசி, கோதுமை மற்றும் கரும்பு பயிர்களில் ஏற்படுத்தியது.



அதிகளவு பாசன வசதி கொண்ட விவசாயிகள் அதிகளவு பயன் பெற்றதும், குறிப்பாக நமது நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு 30 மில்லியன் ஹெக்டர் என்ற அளவில் இருந்து தொடர்ச்சியாக உயர்ந்து 44 மில்லியன் ஹெக்டர் என்ற அளவை எட்டியும், கோதுமை சாகுபடியை பொறுத்தவரை 9 மில்லியன் ஹெக்டர் என்ற சாகுபடி பரப்பளவில் உயர்ந்து 31 மில்லியன் ஹெக்டர் என்ற அளவை எட்டிவிட்டது. 


இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல், கோதுமை போன்றவை நமது உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தும், நாட்டின் பொது வழங்கல் முறை  வாயிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணவுத் தேவையை சந்திக்க பெரிதும் உதவியது.


மறுபுறம் நமது இந்திய விவசாயத்தின் பெரும் பகுதி மழை நம்பிய மானாவரி நிலங்களை கொண்டுள்ள காரணத்தால் 65% விவசாயிகளுக்கு இந்த குறைந்தபட்ச விலை நிர்ணயத்தால் எந்தவிதமான லாபமும் இல்லை. 




மாறாக விலை நிச்சயத்தன்மை அல்லது உறுதித்தன்மையை நோக்கி பல விவசாயிகள் நெல், கோதுமை மற்றும் கரும்பு சாகுபடியை தொடரவும், பெருக்கவும் செய்வது இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்ட விளை பொருட்களை கொள்முதல் செய்து, சேமித்து நிர்வாகம் செய்து விற்கும் வகையில் நெல் மற்றும் கோதுமையில் அரசுக்கு 3 லட்சம் கோடி வரை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. 


இது வருடந்தோறும் பெருகும் சூழலில் தற்போதைய பருவ மாற்று பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெறவும் தற்போதைய விலை நிர்ணய கொள்கையால் அதிகப்படியான நெல் மற்றும் கோதுமை சாகுபடியைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் நமது நாட்டின் வருவாய் குறைந்த பசுமைப்புரட்சியின் பயன்களை பெறாத அல்லது அனுபவிக்காத ஏழை, எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மாற்று விலை நிர்ணய அல்லது ஆதரவு வேளாண் கொள்கைகளை நாம் அமல்படுத்த வேண்டியது அவசியம்.


தற்போதைய குறைந்தபட்ச விலை நிர்ணய கொள்கையை பல மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்வகைப் பயிர்கள், நெல்லில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தும் போது நமது விவசாயிகள் மாற்றுப் பயிர்கள் மற்றும் குறைந்த முதலீட்டில் அதிகளவு லாபம் பெற்று தரும் பயிர்கள் சாகுபடி ஈடுபடுபவர், 




இதன் வாயிலாக தற்போதைய பருவமாற்றுப் பிரச்சனைகளை தாங்கி வளரும் தன்மை கொண்ட பயிர்வகைப் பயிர்கள் மற்றும் முந்தைய பாரம்பரிய ரகங்கள் சாகுபடி பரப்பளவு வெகுவாக பரவும் நமது நாட்டில் இப்புதிய பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் போது நமது மானாவாரி விவசாயிகள் மற்றும் பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர்.


இப்பயிர்கள் உணவு வழங்கல் துறை வாயிலாக நமது நாட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதன் வாயிலாக நமது ஊட்டச்சத்து சத்து குறைபாடுகள் பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வுகளை நாம் எளிதாகக் காண முடியும். 


இதன் வாயிலாக உலக அரங்கில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட நாடு என்ற அவப்பெயரையும் நம்மால் மாற்ற முடியும். இவ்வாறு தற்போதைய வேளாண் விளைப் பொருட்கள் கொள்முதலில் புதிய பயிர்வகைப் பயிர்கள் மற்றும் பாரம்பரிய நெல் மற்றும் கோதுமை ரகங்களை இணைப்பதன் வாயிலாக நமது நாட்டின் வளங்குன்றிய பகுதிகள் மற்றும் மானாவாரி விவசாயிகள் தற்போதைய குறைந்தபட்ச விலை நிர்ணய கொள்கையின் பயன்கள் மற்றும் பயன்களை எளிதாக பெற முடியும். 




இதன் வாயிலாக மிகவும் குறைந்த முதலீட்டில், மானாவாரி விவசாயிகளின் வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்குவதுடன் நம்மால் குறைந்த நீரில் அதிகளவு மானாவாரி நிலங்களில் சாகுபடி பரப்பளவை பெருகி நமது கிராமப்புற இந்தியா வளம் பெற வழிவகை செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

 

தகவல் வெளியீடு


முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப்பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.


மேலும் படிக்க....


PMFBY பயிர்க் காப்பீடு செய்வது எப்படி? பாதிப்பு கணக்கீட்டு முறை & காப்பீட்டுக் கட்டண விபரங்கள்!


வாட்ஸ் ஆப்-ல் வானிலைத் தகவல்கள் 'மேக்தூத்' வானிலை தகவல்களை விவசாயிகள் எளிதில் பெறலாம்!!


விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது! பயறு வகை பயிரிட்டு மண்வளம் காக்கலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments