விவசாயிகளே ஸ்பிரிங்ளர் அமைக்க ரூ.21,000 முதல் ரூ.23,500 வரையில் மானியம்!!

 


விவசாயிகளே ஸ்பிரிங்ளர் அமைக்க ரூ.21,000 முதல் ரூ.23,500 வரையில் மானியம்!!


தென்னந்தோப்புக்குள் ஸ்பிரிங்ளர் அமைக்க அதிகபட்சமாக ரூ.23,500 வரையில் மானியம் வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் தவறாது இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி, பொள்ளாச்சி விவசாயிகள், தென்னைக்கு நன்மை தரும் ஊடுபயிர்களை சாகுபடி செய்து இரட்டை நன்மை பெறலாம், என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தென்னை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கூடுதல் வருமானம் மற்றும் பல்வேறு பயங்களைப் பெற, ஊடுபயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். வாழை, கோகோ மற்றும் ஜாதிக்காய் அதிகளவில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 



இதை தவிர, தென்னைக்கு நல்ல பயன் தரும் மாற்று ஊடுபயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சவுமியா அவர்கள் கூறியதாவது,

 

'ஸ்பிரிங்ளர்' அமைக்க அதிகபட்ச மானியம்


தென்னைக்குள் அனைத்து வகையான கீரைகளையும் பயிரிடலாம். கீரைகள் தோப்பு நிழலில் செழித்து வளரும். ஈரப்பதம், பாசனம் இவைகளுக்கு அதிகம் தேவைப்படும் என்பதால், விவசாயிகள் 'ஸ்பிரிங்ளர்' அமைத்து பயன்பெறலாம். ஸ்பிரிங்ளர்' அமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் தோட்டக்கலை துரையின் மூலமாக வழங்கப்படுகிறது.

 

63 எம்.எம் ஸ்பிரிங்ளர் அமைக்க, ஹெக்டேருக்கு, 21,000 ரூபாயும், 75 எம்.எம். ஸ்பிரிங்ளர் அமைக்க ஹெக்டேருக்கு, 23,500 ரூபாயும் மானியமாக பெறலாம்.

 



கீரை சாகுபடி வாயிலாக, தினமும் வருவாய் ஈட்டலாம். இதே போல், தென்னந்தோப்பிற்குள் கொத்தவரை, பொறியல் தட்டை போன்றவை சாகுபடி செய்து வந்தால், அவற்றின் வேர்கள் நைட்ரஜன் சத்துக்களை உறிஞ்சி தக்க வைத்து, தென்னைக்கு உரமாக அளிக்கும். 


அறுவடை முடிந்த பின், செடிகளை உழுது மக்க வைப்பதன் மூலமாக கூடுதலாக தழைச்சத்தும் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர்கள் வாயிலாக, கூடுதல் வருமானமும் ஈட்ட முடிவதுடன், தென்னைக்கான உரச்செலவும் மிகவும் குறைகிறது.

 



இந்த வகை பயிர்களுக்கும் மானியம் பெற்று 'ஸ்பிரிங்ளர்' அமைக்கலாம். மேலும், தென்னந்தோப்புக்குள் 'ஸ்பிரிங்ளர்' அமைப்பதால், தோப்பின் தட்பவெப்பம் மாறும். ஈரப்பதம், குளிர்ச்சி அதிகரித்து, மரங்களின் ஆரோக்கியமும், விளைச்சலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


மானாவாரி விவசாயிகளின் வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்க பாரம்பரிய ரகங்கள் சாகுபடி!!


வாட்ஸ் ஆப்-ல் வானிலைத் தகவல்கள் 'மேக்தூத்' வானிலை தகவல்களை விவசாயிகள் எளிதில் பெறலாம்!!


நிலக்கடலைப் பயிரில் புரோடினியா புழுவின் தாக்குதல் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments