உளுந்து சாகுபடியில் உற்பத்தி தொழில் நுட்பங்கள் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனைகள்!!


உளுந்து சாகுபடியில் உற்பத்தி தொழில் நுட்பங்கள் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனைகள்!!


உளுந்து சாகுபடியில் உற்பத்தி தொழில் நுட்பங்கள்


தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன் பயறுவகைப் பயிர்களில் பல உளுந்து இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் விவசாயிகள் கீழ்க்கண்ட இரகங்களை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இதன் விபரம் பின்வருமாறு

 

பயிர்/ இரகம் / வெளியிடப்பட்ட வயது / மகசூல் (கி / எக்டர்) / சிறப்பியல்புகள் / ஆண்டு (நாட்கள்) / மானாவாரி இறவை


  • வம்பன் 8 / 2016 / 65-75 / 871 988 / மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறனுடையது.


  • வம்பன் 9 / 2019 / 70-75 /1230 / நெல் தரிசு உளுந்து, மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறனுடையது.


  • வம்பன் 10 / 2019 / 70-75 / 1130 / மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறனுடையது.

  • வம்பன் 11/ 2020 / 70-75 / 865 940 / ஒரு சேர முதிர்ச்சி பெறும் தன்மையுடையது

 


பயறுவகைப் பயிர்களுக்கு மண் வகை


பயறுவகைப் பயிர்களுக்கு ஆழமான கரிசல் மண், குறைவான ஆழம் கொண்ட செம்மண் மற்றும் நல்ல வடிகாலுடன் கூடிய மண் வகைகள் சிறந்ததாகும்.

 

நிலம் தயாரித்தல்


உளுந்து சாகுபடி செய்யும் நிலம் நல்ல வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழுதபின், ரோட்டவேட்டர் மூலம் உழுது சமன்படுத்தி 5×4 மீட்டர் அல்லது 8-5 மீட்டர் என்ற அளவில் பாத்திகளாக பிரித்து விதைக்க வேண்டும். மண்ணின் கடினத் தன்மையை நீக்க எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு தூளுடன் ஏக்கருக்கு 5 டன் மக்கிய தென்னை நார்க்கழிவு இடலாம்.

 

உளுந்து சாகுபடிக்கு பருவம்


உளுந்து சாகுபடிக்கு ஆடி,புரட்டாசி மற்றும் தைப்பட்டம் மிகவும் ஏற்ற பருவமாகும். பயிர் முதிர்ச்சி அடையும் தருணத்தில் அதிகமழையோ, வெயிலோ இல்லாமல் இருப்பது அவசியம்.


 


விதை நேர்த்தி


இமிடாகுளோபிரிட் பூச்சிக் கொல்லி மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


பூஞ்சாணக்கொல்லி விதை நேர்த்த செய்து 24 மணி நேரம் கழித்து எக்டருக்கு 200 கிராம் ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கலவையை 500 மிலி ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து 3-4 மணிநேரம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.


விதைப்பு


உளுந்து பயிரை வரிசை முறையில் விதைக்க இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். பயிர் எண்ணிக்கையை பொறுத்தவரை ஒரு சதுர மீட்டருக்கு உளுந்து 33 செடிகள் இருக்க வேண்டும். முளைக்காத இடங்களில் ஊறவைத்த விதையினை 5 முதல் 7 நாட்களுக்குள் விதைக்க வேண்டும்.

 


உர மேலாண்மை

 

அடியுரம் மானாவாரி இறவை

(கிலோ / ஏக்கர்) (கிலோ / ஏக்கர்)


  • யூரியா 11 22


  • சூப்பர் பாஸ்பேட் 62.5 125


  • பொட்டாஷ் 8 17


  • கந்தகம் 4 8


  • நுண்ணூட்டச்சத்து 2 5

 

அதிக மகசூல் பெற இலை வழி உரமிடல்


டிஏபி 2 சதம் தெளிப்பதனால் பயிருக்கு தேவையான தழை மற்றும் மணிச் சத்துக்கள் உடனடியாக இலைகள் மூலம் பயிருக்கு கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை முதல் நாள் 10 லிட்டர் நீரில் ஊறவைத்து மறுநாள் தெளிந்த கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீர் கலந்து 200 லிட்டர் கரைசல் தயார் செய்ய வேண்டும். 



பயிர் பூக்கும் சமயத்திலும் 15 நாட்கள் கழித்து காய் பிடிக்கும் தருணத்திலும் கைத்தெளிப்பான் கொண்டு காலை (அ) மாலை நேரத்தில் தெளிக்கவும். தெளிக்கும்போது நிலத்தில் ஈரம் இருப்பது அவசியம். அல்லது டி.என்.ஏ.யு. பயறு அதிசயம் ஏக்கருக்கு 2 கிலோவினை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் பருவத்தில் தெளிக்கலாம்.

 

பூ உதிர்வதை தவிர்க்கும் வழிமுறைகள்


நாப்தலின் அசிட்டிக் அமிலம் (என்.ஏ.ஏ.) என்ற பயிர் ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மி.கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள கழித்தும் செடிகளில் நன்கு நனையுமாறு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.


மானாவாரிப் பயிர்களுக்கு செடிகள் வறட்சியைத் தாங்க 0.5 சதவிகித பொட்டாசியம் குளோரைடு கரைசலைத் தெளிக்க வேண்டும். பூ உதிர்வதைக் கட்டுப்படுத்துவதால் 15 முதல் 20 சதவிகித மகசு{லை அதிகரிக்க முடியும்.

 

களை மேலாண்மை


களைகளின் தாக்கத்தால் சுமார் 30 முதல் 45 சதம் வரை மகசு{ல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, விதை விதைத்து 3ஆம் நாள் பென்டி மெத்தலின் ஏக்கருக்கு 1.32 லிட்டரினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும் அல்லது பென்டி மெத்தலின் ரூ இமாசித்தபயர்களைக் கொல்லியினை ஏக்கருக்கு 1.3 லிட்டர் அளவில் தெளிக்கலாம்.



களை முளைத்த பின் அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு இமாஸிதபயர் 200 மி.லி. மற்றும் புல் வகை களைகளை கட்டுப்படுத்த குயிசல@பாப் ஈத்தைல் 400 மி.லி யை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதை விதைத்த 15 முதல் 18 நாளில் தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம் அல்லது 20 முதல் 25ம் நாளில் ஒரு கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தலாம்.

 

நீர் நிர்வாகம்


தண்ணீர் தேவை 350-400 மி.மீ. ஆகும். விதைத்த 3வது நாள் உயிர் தண்ணீர், மண்ணின் தன்மை மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப நீர்ப் பாய்ச்ச வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.


வளர்ச்சி நிலை, பூக்கும் நிலை மற்றும் காய் பிடிக்கும் நிலை ஆகிய மூன்று முக்கிய நிலைகளில் நீர்ப்பாசனம் மிகவும் அவசியம்.

 

அறுவடை


காய்கள் பழுப்பு நிறம் அடைவது அறுவடையின் அறிகுறியாகும். 50 சத பூ பூப்பதிலிருந்து சுமார் 30 நாட்களில் காய்கள் முதிர்ச்சியடைந்து விடும். எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுவடை செய்ய வேண்டும். லும் பிரித்தெடுத்த பயறுவகை தானியங்களை 10 முதல் 12 சதம் ஈரப்பதத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

 


தகவல் வெளியீடு


முனைவர் கோ.நெல்சன் நவமணி ராஜ், முனைவர் த.செந்தில்குமார் மற்றும் முனைவர் வீ.மு.இந்துமதி, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன்.


மேலும் படிக்க....


பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து வேளாண்துறை அறிவுரை!!


பருத்தி விலை உயர்வு 1 பொதி-170 கிலோ! அதிக நுகர்வு காரணமாக, உலகெங்கிலும் பருத்தியின் தேவை அதிகரிப்பு!!


விவசாயிகளே ஸ்பிரிங்ளர் அமைக்க ரூ.21,000 முதல் ரூ.23,500 வரையில் மானியம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments