Random Posts

Header Ads

பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து வேளாண்துறை அறிவுரை!!

 


பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து வேளாண்துறை அறிவுரை!!


புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது நடப்பு பருவத்தில் உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி மேற்கொள்ள 6800 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பயறு சாகுபடி மேற்கொள்ள விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


எனவே, சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து மற்றும் பாசி பயறு போன்ற பயறு வகை பயிர்களில் நோய் மேலாண்மை மேற்கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.



விதைப்பதற்கு தரமான நோயற்ற விதைகளையே தேர்ந்தேடுக்க வேண்டும். நச்சுயிரி நோய்களான மஞ்சள் தேமல் நோய், இலை சுருள்வு நோய் மற்றும் மலட்டுத் தேமல் நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை 40 நாட்கள் வரை உடனடியாக அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.


உளுந்தில் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மைக் கொண்ட இரகங்களான வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 10 மற்றும் வம்பன் 11 போன்ற இரகங்களை பயிரிடலாம்.


வேரழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்திட விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு எதிர் உயிரி டிரைக்கோடேர்மாவிரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மாவிரிடி 1 கிலோவினை 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து மண்ணில் இடவேண்டும்.



சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விதைகளை இமிடாகுளோபிரிட் 600 FS @ 5 மி,லி / கிலோ என்ற அளவில் விதை நேர்த்திச் செய்து விதைக்க வேண்டும்.


மஞ்சள் தேமல் மற்றும் இலை சுருள்வு போன்ற நச்சுயிரி நோய்களைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். 


மேலும், தாக்குதல் அதிகமாகும் போது தயமீதாக்சம் (75 WP) 40 கிராம் அல்லது இமிடோகுளோபிரிட் (17,8 SL) 100 மி.லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைகைத் தெளிப்பான் கொண்டுத் தெளிக்க வேண்டும்.


வேரழுகல் நோய் தாக்கிய செடிகளைச் சுற்றி கார்பென்டாசிம் (50 WP) 1 கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் நனையும் படி ஊற்ற வேண்டும்.



இலைப்புள்ளி, சாம்பல் நோய் மற்றும் துருநோய்களை கட்டுப்படுத்த புரோப்பிகோனசோஸ் (25 EC) 200 மி.லி மருந்தினை நோயின் அறிகுறி தோன்றியவுடன் ஒரு முறையும்10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.


காய்புழு தாக்கத்தினை கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு குளோரான்டிரிப்ரோல் 60 மி.லி என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

வெப்பநிலை அதிகமாகும் போது தோன்றும் சுருள் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்திட இமாமெக்டின்பென்சோய்ட் 100 மி.லி என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


மேலும் படிக்க....


பருத்தி விலை உயர்வு 1 பொதி-170 கிலோ! அதிக நுகர்வு காரணமாக, உலகெங்கிலும் பருத்தியின் தேவை அதிகரிப்பு!!


விவசாயிகளே ஸ்பிரிங்ளர் அமைக்க ரூ.21,000 முதல் ரூ.23,500 வரையில் மானியம்!!


மானாவாரி விவசாயிகளின் வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்க பாரம்பரிய ரகங்கள் சாகுபடி!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments