PM கிசான் E-KYC செய்ய மார்ச் 31 கடைசி தேதி என அறிவிப்பு! 11வது தவணை மார்ச் 1-ஆம் தேதியே வெளியீடு!!
பிஎம் கிசான் திட்டம்
PM கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM KISAN) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது.
இத்திட்டத்தின் கீழ் தகுதி உடைய விவசாயிகளுக்கு ஒரு ஆண்டிற்கு 6000 ரூபாய் விவசாய நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டிற்கு மொத்தம் 3 தவணைகள் வீதம் வழங்கப்படுகின்றன. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
பிஎம் கிசான் திட்டத்தில் 11ஆவது
தவணை
பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது 11ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 11வது தவணை எப்போது கிடைக்கும் என்ற தகவலை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 2022 மார்ச் 1 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் தாமதம் ஆனாலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணம் வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிறையப் பேருக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை. எனவே பணம் இன்னும் வரவில்லை என்றால் இந்த கீழ் கண்ட எண்களில் புகார் செய்யலாம்.
பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகள் இ-கேஒய்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. PM Kisan இணையதளத்தில் சென்று, எந்தவொரு விவசாயியும் தனது ஆதார் எண், மொபைல் நம்பர் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு தங்களுடைய சுய விவரத்தினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மார்ச் 31ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி முடிக்காவிட்டால் பணம் கிடைக்காது. பிஎம் கிசான் இணையதளத்தில் உள்ள ’farmers corner' வசதியில் இ-கேஒய்சி முடிக்கலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
பிஎம் கிசான் பணம் வராவிட்டால்
PM
கிசான் இலவச எண் - 18001155266.
பிஎம்
கிசான் ஹெல்ப்லைன் எண் - 155261.
லேண்ட்லைன்
எண்கள் 011 23381092, 23382401.
புதிய
ஹெல்ப்லைன் - 011 24300606
மற்றொரு
ஹெல்ப்லைன் - 0120 6025109
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கான கிருஷி யந்த்ரா மானியத் திட்டம்! விவசாய உபகரணங்கள் பாதி விலையில்!!
விவசாயிகளுக்கு 2.5 ஏக்கருக்கு முற்றிலும் இலவசமாக 100% மானியத்தில் வேளாண் உபகரணங்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...