விவசாயிகளுக்கு 2.5 ஏக்கருக்கு முற்றிலும் இலவசமாக 100% மானியத்தில் வேளாண் உபகரணங்கள்!!
உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவி மானியமாக வழங்கப்படும் என வேளாண்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. சித்திரைப்பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூலும், அதற்கு ஏற்ப நல்ல வருமானமும் கிடைக்கும்.
இதனைக் கவனத்த்தில் கொண்டு, உளுந்து சாகுபடி செய்ய உதவும் வகையில், தெளிப்பு
நீர் பாசனக்கருவி மானியமாக வழங்கப்படும் என வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் கூறினர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர் நுட்ப மையம் நெறிமுறைகளின்படி இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளான வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நீர்வள, நிலவள திட்ட விஞ்ஞானி செல்வமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உளுந்து
சாகுபடி
சித்திரை
பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய 100 சதவீத மானியத்தில் உளுந்துடன் தெளிப்பு நீர்
பாசனக்கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக விதைகள், உரங்கள்,
இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் வண்ண ஒட்டு பொறி மற்றும் நடமாடும் நீர்த் தெளிப்பான் ஆகியவை 100% மானியத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க தகுதி
விண்ணப்பிக்கும்
விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை சொந்தமாக
நிலம் வைத்திருக்க வேண்டும்.
தேவைப்படும்
ஆவணங்கள்
- ஆதார் கார்டு நகல்
- குடும்ப அட்டை நகல்
- சிட்டா அடங்கல் அசல்
- நில வரைபடம்
- சிறு குறு விவசாயி சான்றிதழ்
- 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
மேலேக்
கூறியவற்றை இணைத்து இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அடுத்த மாதம் (மார்ச்) மாதம்
4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நீடாமங்கலம்-மன்னார்குடி
இதில்
திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த நீடாமங்கலம், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் மற்றும்
முத்துப்பேட்டை வட்டார விவசாயிகள் பயன்பெறலாம்.
நீடாமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளான வடுவூர், புதுக்கோட்டை, வட பாதி, தென்பாதி, அக்ரஹாரம், சாத்தனூர், எடமேலையூர், கீழப்பட்டு, அய்யம்பேட்டை, சோனாபேட்டை, எடஅன்னவாசல், கட்டக்குடி, கொத்தங்குடி, காளாச்சேரி, காரக்கோட்டை, ராணிதோப்பு, புளியங்குடி, நெம்மேலி, பருத்திகோட்டை, தளிக்கோட்டை, சமயன்குடிகாடு, ஓவேல்குடி.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மன்னார்குடி வட்டாரத்தில் செருமங்கலம், காரிகோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை, மூவாநல்லூர், துளசேந்திரபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
படிக்க....
உளுந்து சாகுபடியில் உற்பத்தி தொழில் நுட்பங்கள் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனைகள்!!
பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து வேளாண்துறை அறிவுரை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...