இனிமேல் எங்கும் அலைய வேண்டாம்! விவசாயிகளுக்கான சேவைகள் சேவைகள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்!!


இனிமேல் எங்கும் அலைய வேண்டாம்! விவசாயிகளுக்கான சேவைகள் சேவைகள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்!!


ரேஷன் கடைகளில் நிதிச் சேவை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இனி விவசாயிகளுக்கான சேவைகள் அனைத்தையும் ரேஷன் கடைகள் வாயிலாக செய்துகொள்ள முடியும். 


ரேஷன் கடைகள் வாயிலாக நிதி சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நிதிச் சேவைகள் மிக எளிமையாக பெறுவது மட்டுமல்லாமல், முகவர்கள் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.



நாடு முழுவதும் தற்பொழுது வரை சுமார் 3 லட்சம் பொதுச் சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த மையங்களில் ஆதார், பான் கார்டு, ரயில் டிக்கெட், அரசு திட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை எளிதில் பெற முடிகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் பொது சேவை மையங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் 6 லட்சம் கிராமங்களுக்கு பொது சேவை மையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் முடிவு செய்திருப்பதாகக் செய்தி வெளியாகி உள்ளது.

 


கிட்டத்தட்ட சுமார் 8,000 பொது சேவை மையங்கள், ஏற்கனவே ரேஷன் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் 10,000 கூடுதல் பொது சேவை மையங்களை ரேஷன் கடைகளுடன் இணைக்க திட்டம் நிறைவேற்றபட உள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகளிலேயே பொது மக்களால் நிதிச் சேவைகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

 

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களும் ரேஷன் கடைகள் வாயிலாகவே ஆதார், பான் கார்டு, வங்கி சேவைகள், அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கான சேவைகள், ஓய்வூதியம், பில் கட்டணம், காப்பீடு, டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இனி பெற்றுக்கொள்ள முடியும்.



மேலும் படிக்க....


அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தது மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து பொருளாதாரத்தை பெருக்க ஆலோசனை!!


விவசாயிகளுக்கு 2.5 ஏக்கருக்கு முற்றிலும் இலவசமாக 100% மானியத்தில் வேளாண் உபகரணங்கள்!!


PMFBY திட்டம் காரீஃப் பருவத்தில் வீடு வீடாகச் சென்று பதிலளிக்கும் அரசு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும்உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments