Random Posts

Header Ads

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மண்வள அட்டை வழங்கும் கூட்டம்!!


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மண்வள அட்டை வழங்கும் கூட்டம்!!


அத்திவெட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கூட்டம் மற்றும் மண்வள அட்டை வழங்குதல் கூட்டம் நடைபெற்றது. மதுக்கூர் வட்டம் அத்திவெட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மேலாண்மை கூட்டம் மற்றும் மண் மாதிரி எடுத்த விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அசிஸ்ட் தொண்டு நிறுவன கள அதிகாரி சின்னராசு மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர் சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் அட்மா திட்ட பணியாளர்  ஐயா மணி ஆகியோர் மேலாண்மை குழு உறுப்பினராக கலந்து கொண்டனர்.



விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மானியங்கள் அதற்கான விதிமுறைகள் மற்றும் தென்னைக்கான பராமரிப்பு மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவைகளைப் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.


இதுவரை அடிப்படை விபரங்களை வழங்காத விவசாயிகளுக்கு படிவங்களை வழங்கி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்  கொண்டனர். 


அசிஸ்ட் தொண்டு நிறுவன அருட்சகோதரி மற்றும் களப்பணியாளர் சின்னராசு ஆகியோர் அத்திவெட்டி கிராமத்தில் மண் மாதிரி கொடுத்திருந்த விவசாயிகளுக்கு ஆடுதுறை மண் ஆராய்ச்சி நிலையத்தில் பரிசோதனைக்கு கொடுத்து பெறப்பட்ட மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.



மண்வள அட்டை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவினை அறிந்து தேவைக்கேற்ப உரம் இடலாம் உரச் செலவை குறைக்கலாம் ஆகியவை பற்றி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் லக்கி கூறினார். 


கூட்டத்தில் இயற்கை விவசாய குழுவை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பாலசுப்பிரமணியன் வடிவேலு மூர்த்தி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். 


ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் அனைத்து விவசாயிகளும் அடிப்படை விபரங்களை பதிவு செய்து தங்கள் தேவைகளை அரசிடமிருந்து எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறி கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.



மேலும் படிக்க....


சம்பா நெல் அறுவடைக்கு பிறகு தஞ்சையில் 425 எக்டர் உளுந்து சாகுபடி! மாவட்ட ஆட்சியர் நேரடியாக திடீர் ஆய்வு!!


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மானியத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்!!


அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தது மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து பொருளாதாரத்தை பெருக்க ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments