Pm Kisan 11 கோடி விவசாயிகளுக்கு 1.82 லட்சம் கோடி நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!
PM Kisan Samman Nidhi Yojana
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கி மூன்றாண்டுகள்
நிறைவு பெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டம் சிறு விவசாயிகளுக்கு
பெரும் உதவியாக இருந்தது மேலும் இதன் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றுயிருப்பதாக
கூறினார்.
இதன்
கீழ், கிட்டத்தட்ட 11 கோடி விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே கிளிக்கில் 10 முதல் 12 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக பணம் மாற்றப்படுகிறது.
இந்த திட்டம் 24 பிப்ரவரி 2019 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து முறையாக
தொடங்கப்பட்டது. ஆனால் அதன் அதிகாரப்பூர்வமற்ற தொடக்கம் டிசம்பர் 1, 2018 முதல் தொடங்கப்பட்டது.
மத்திய
அரசு ஆண்டுக்கு 14.5 கோடி பேருக்கு நிதி வழங்க விரும்புகிறது. ஆனால், இதுவரை 11.15
கோடி பயனாளிகள் மட்டுமே பயன் பெற்றிருப்பதாகவும், மூன்றாண்டுகளில் ரூ.1.82 லட்சம் கோடிக்கு
மேல் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, சுமார் 3 கோடி விவசாயிகள்
பதிவு செய்யவில்லை அல்லது அவர்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என தோன்றுகிறது.
நீங்களும்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இல்லாவிட்டால், உங்களிடம் விளை நிலம் இருந்தால், அதில் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில், விவசாயிகள் குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் குறிக்கிறது.
கூடுதலாக, விவசாய ஆவணங்களுக்கு உரிமையுள்ள எவருக்கும் அதன்
அடிப்படையில் தனி சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
இத்திட்டத்தின்
கீழ் பதிவு செய்ய, சரிபார்க்க என பல சேவைகளுக்கான வழிமுறை
நீங்கள் சரிபார்க்க வேண்டுமெனில், pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள மெனுவில் 'Farmers Corner' என்பதை தேர்வு செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் கிடைக்கும் தொகுப்புகளில் 'Beneficiary List' என்பதை தேர்வு செய்யுங்கள். பின் அதில் உங்கள் மாநிலம் , மாவட்டம், போன்ற விவரங்களை தேர்வு செய்யுங்கள்.
அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு 'Get Report' என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் உங்கள் பகுதியில் PM-Kisanல் இணைந்துள்ள அனைத்து விவசாயிகளின் முழு பட்டியலையும் காண முடியும்.
நேரடியாக பட்டியலை பார்க்க இதனை கிளிக் செய்யுங்கள் https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx.
மேலும்
படிக்க....
PM கிசான் E-KYC செய்ய மார்ச் 31 கடைசி தேதி என அறிவிப்பு! 11வது தவணை மார்ச் 1-ஆம் தேதியே வெளியீடு!!
விவசாயிகள் தங்கள் பயிரின் அதிக விளைச்சலுக்கு சொட்டு நீர் பாசனமுறை அமைப்பீர்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...