கன்று பிறந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் நல்ல திடமான கன்றை உருவாக்குதல் எப்படி?
இன்றைய கன்றே நாளைய பசுவாகும். பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பண்ணையில் பிறக்கும் கன்றுகளை அதிக கவனம் செலுத்தி வளர்ப்பதுடன் முழுமையான கன்று பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த கிடேரி கன்றுகளை உருவாக்க முடியும்.
மேலும் வெளி பண்ணியாளர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து கன்றுகளை வாங்குவதையும் இதன் மூலம் தவிர்க்க முடியும். கன்றுகளின் வளர்ச்சி பசுவின் வயிற்றில் இருக்கும் போதே ஆரம்பமாகுகிறது.
எனவே, சினைப் பசுக்களுக்கு தேவையான கலப்புத்
தீவனம், பசும்புல் மற்றும் தாது உப்புக் கலவை போன்றவற்றை சரியான அளவு அளிப்பதன் மூலம் ஆரோக்கியமான கன்றினை
பெற முடியும்.
கன்று
பிறந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
கன்று பிறந்தவுடன் தாய்ப்பசு கன்றின் மேல் இருக்கும் கோழை போன்ற திரவத்தை நக்கி சுத்தம் செய்துவிடும். அவ்வாறு தாய்ப்பசு செய்யவில்லை என்றால் இளங்கன்றின் மூக்கின் வெளிப்புறம் மற்றும் உடலின் மேல் காணப்படும் கோழை போன்ற திரவத்தை சுத்தமான துணி அல்லது வைக்கோலைக் கொண்டு நாமாகவே சுத்தம் செய்ய வேண்டும்.
கன்றுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் கோழை போன்ற திரவத்தை அகற்றிய பின் மார்பகத்தை சற்று அழுத்தி சுவாசிக்கச் செய்ய வேண்டும். குளிர் காலங்களில் தரையில் வைக்கோலை பரப்பி அவற்றின் மேல் கன்றை படுக்க வைத்து வெது வெதுப்பான சூழ்நிலையை அமைத்து தர வேண்டும்.
கன்றின் தொப்புள் கொடியை 2 முதல் 3 செ.மீ நீளத்திற்கு விட்டுவிட்டு ஒரு சுத்தமான நூலினால் இறுகக் கட்டவேண்டும். அதன் கீழ் 1 செ.மீ விட்டு சுத்தமான கத்திரி கொண்டு வெட்டி டிங்சர் அயோடின் மருந்தை தடவவேண்டும்.
இதனால் தொப்புள் கொடி வழியாக நோய்க்கிருமிகள் உட்சென்று பின்வரும் காலங்களில் காய்ச்சல், தொப்புள் பகுதியில் கீழ் கட்டி மற்றும் மூட்டுகளில் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
சீம்பால்
கன்று
பிறந்த 30 நிமிடத்திற்குள் சீம்பால் குடிப்பது அவசியம். கால தாமதத்தினால் சீம்பாலில்
உள்ள நோய் எதிர்ப்புப் பொருட்கள் வயிற்றினுள் உறிஞ்சப்படுவது சற்று குறையும். எப்போதும் கன்று
பிறந்து 10 முதல் 15 நிமிடத்தில் முதல் கட்ட சீம்பாலும், 10 முதல் 12 மணி நேரத்திற்க்குள்
இரண்டாம் கட்ட சீம்பாலும் கன்றுக்கு புகட்ட வேண்டும்.
சீம்பாலின்
முக்கியத்துவம்
நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்கூடிய இம்யுனோகுளோபுலின் சத்து (ஆன்டிபாயடிகள்) அதிகளவில் உள்ளது. அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் உள்ளன.
சாதாரண பாலை விட பல மடங்கு புரதச் சத்து நிறைந்தது. கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான டிரிப்டோபன் அமினோ அமில சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மலமிளக்கியாக செயல்பட்டு கன்றின் முதல் சாணத்தை வெளியேற்ற உதவுகிறது.
ஒரு நாளைக்கு கன்றுக்கு 2.5 கிலோ சீம்பால் அளிக்க வேண்டும். இதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து அளிக்கலாம். பொதுவாக கன்றின் எடையில் பத்தில் ஒரு பங்கிற்கு சமமாக பால் கன்றுக்கு கொடுக்க வேண்டும்.
ஒருவேளை தாய்ப்பசு இறந்து விடுதல், மடி வீக்கம் போன்ற சீம்பால் கிடைக்காத தருணங்களில் அதே சமயத்தில்
கன்று ஈன்ற இதர பசுக்களின் சீம்பாலை அளிக்கலாம். அதுவும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட
பொருட்களை குறிப்பிட்டுள்ள விகிதத்தில் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை கொடுக்கலாம்.
முட்டை -1
தண்ணீர் – 300 மி. லி.
விளக்கெண்ணெய் – 1-2 தேக்கரண்டி
சுத்தமான கறந்த பால் – 500 கிராம்
வைட்டமின் ஏ – 10,000 ஐ ரு
கன்று பிறந்த இரண்டாவது வாரத்திலிருந்து
கன்றுத் தீவனம் கொடுக்க ஆரம்பிக்கலாம். மூன்றாவது வாரத்தில் இருந்து ஒரு நாளைக்கு 100 கிராம்
தீவனம் என்றளவில் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு வாரமும் 100 முதல் 200 கிராம் வரை
தீவனத்தை அதிகரித்து ஆறு மாத வயது வரை கொடுக்க வேண்டும். மூன்றாவது வாரத்திலிருந்து நல்ல சத்துள்ள
எளிதில் செரிக்கக் கூடிய தீவனங்களை கொடுக்க தொடங்கலாம்.
தாது உப்புக் கட்டி
கன்றுகள் மண் தின்பதை தவிர்க்க தாது உப்புக் கட்டியை கொட்டிலில் கட்டி தொங்க விடவேண்டும். கன்றுகள் தாது உப்புக் கட்டியை நக்கி சாப்பிடுவதால் மண் திண்பது மற்றும் மற்ற கன்றுகளின் உரோமங்களை நக்கி உண்பது போன்றவை தடுக்கப்படும். இதன் மூலம் ஏற்படும் குடற்புழுக்களின் பாதிப்பும் வயிற்று உபாதைகளும் முற்றிலும் தவிர்க்கப்படும்.
தகவல் வெளியீடு
திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெகதாம்பாள், மருத்துவர் பெ.கோகிலா, முனைவர் ம.மலர்க்கொடி, செ.பிரபாகரன் (வேளாண் காலநிலை கண்காணிப்பாளர்).
தொடர்புக்கு
0427 -2422550,
90955
13102, 96775 51797.
மேலும்
படிக்க....
வாட்ஸ் ஆப்-ல் வானிலைத் தகவல்கள் 'மேக்தூத்' வானிலை தகவல்களை விவசாயிகள் எளிதில் பெறலாம்!!
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மூலம் ஆடு மற்றும் கறவை மாடுகளுக்கான காப்பீட்டு பணி!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...