புதினா மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வரை லாபம் கிடைக்கும்! மணக்கும் புதினா சாகுபடி முறைகள்!!
ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் புதினா. கீரை வகைவகையை சார்ந்த புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் சைவ மற்றும் அசைவ உணவுக்கு சுவையூட்டத்திற்கும் மற்றும் மணமூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
உலகச்சந்தையில் புதினா எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அதிக விலை கிடைக்கும். செரிமானக் குறைவு, தொண்டைக் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடல் புத்துணர்வைப் பெறும். மேலும் புதினா எண்ணெய் உடல் நல மருந்துகள் மற்றும் அழகுப் பொருள்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புதினாவில்
உள்ள ஊட்டச்சத்துகள்
இரும்பு
28% வைட்டமின் ஏ 84%
பொட்டாசியம்16%
வைட்டமின் சி 52%
மாங்கனீசு
5 % பி காம்ப்ளக்ஸ் 5%
கலோரி 17% கால்சியம்25%
புரதம்
7%
புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இதற்கு காலநிலை எதுவும் கிடையாது. இருபினும் ஜூன் – ஜூலை மாதங்கள் புதினா நடவு செய்ய சிறந்த பருவம் ஆகும்.
இரகங்கள்
ஜப்பான் புதினா எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911, ஸ்பியர் எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1, பெர்கோ – சிரன் மிளகு – குக்ரைல்.
நிலம்
தயாரித்தல்
நிலத்தை
நன்கு பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்பு சாகுபடிக்கு ஏற்றவாறு பாத்திகள்
அமைத்துக் கொள்ளவேண்டும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்ய வேண்டும்.
இது
பொதுவாக பத்தியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. சிறிய அளவு வேர் இருந்தாலும்
நன்கு தழைத்து வளரும் தன்மை உடையது. தயார் செய்துள்ள பாத்திகளில் 40 x 40 செ.மீ இடைவெளியில்
புதினாவை நடவு செய்ய வேண்டும்.
உர
நிர்வாகம்
ஏக்ருக்கு
12 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து, 4 கிலோ சாம்பல் சத்தைத் தரும் உரங்களை அடியுரமாக
இட வேண்டும். நடவு செய்த 60 முதல் 120 நாளில், 12 கிலோ தழைச்சத்தைத் அளிக்கும் உரத்தை
இரண்டாகப் பிரித்து இட வேண்டும். அறுவடைக்குப் பிறகும் உரமிட வேண்டும்.
நீர்
நிர்வாகம்
உப்பு
நீரை பாய்ச்சினால், அது விளைச்சலை பாதிக்கும். எனவே, நல்ல நீரை மட்டும் பாய்ச்ச வேண்டும்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவைக்கேற்ப கைகளை
எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ஊடுபயிர்
நிலம்
குறைவாக வைத்துள்ள விவசாயிகள் தென்னை மரங்களுக்கு இடையில் இதை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
பூச்சித்
தாக்குதல்
புதினாவை
அதிகளவில் பூச்சிகள் தாக்குவதில்லை. ஒரு சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான்
கறுப்புப் புழுத்தாக்குதல் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த, இஞ்சி பூண்டு கரைசலைத்
தெளிக்கலாம்.
அறுவடை
இரண்டு
மாதங்களில் முதல் அறுவடையைத் தொடங்கலாம். திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒரு
கட்டு புதினா 10-15 ரூபாய் வரை விற்பனையாகும். இவற்றை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என, நான்கு ஆண்டுகள்
வரையில் விவசாயிகள் அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 – 20 டன் புதினா இலைப்பாகம் கிடைக்கும். ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 100-150 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.
தகவல் வெளியீடு
ஜெய்சங்கர், விஷ்ணு, உதவிப் பேராசிரியர்கள், தோட்டக்கலை துறை, தினேஷ்குமார்,
உதவிப் பேராசிரியர், வேளாண் விரிவாக்க துறை, தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர்.
மேலும்
படிக்க....
வேளாண் துறையில் மத்திய பட்ஜெட் 2022ன் ஆக்கப்பூர்வ தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கு!!
கன்று பிறந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் நல்ல திடமான கன்றை உருவாக்குதல் எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...