காயர் பித் உலர்த்துதல், கட்டி தயாரிப்பில் மண் கலப்படம்! தரம் குறைந்து விலைசரிவால் கடும் பாதிப்பு!!



காயர் பித் உலர்த்துதல், கட்டி தயாரிப்பில் மண் கலப்படம்! தரம் குறைந்து விலைசரிவால் கடும் பாதிப்பு!!


பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பல இடங்களில் 'காயர் பித்' தயாரிப்பில் மண் கலக்கப்படுவதால், தரம் குறைந்து விலை சரிந்து விற்பனை முடங்கியுள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில், தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது. 


தென்னையை மூலாதாரமாக கொண்டு, தேங்காய் மட்டையில் இருந்து, தென்னை நார், கயிறு, 'காயர் பித்' கட்டி தயாரிக்கும், 1,150க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன.


பல நாடுகளில், விவசாயம் செய்வதற்கு போதிய அளவு மண் மற்றும் நிலப்பரப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும், குறைந்த இடத்தில், குறைவான அளவு நீர் மற்றும் மண்ணில் விவசாயம் செய்ய, 'காயர் பித்' அத்தியாவசிய பொருளாக உள்ளது.



இங்கு தயாராகும் 'காயர் பித்' கட்டிகள், சீனா, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, தென் கொரியா போன்ற, 106 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த நிதியாண்டில், 6.80 லட்சம் டன் 'காயர் பித்' ஏற்றுமதியானது. 


இந்த கட்டிகள் தயாரிப்பில் மூலப்பொருளான 'காயர் பித்' உலர வைப்பது போன்ற, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதனால் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.


இந்நிலையில், 'காயர் பித்' தயாரிப்பதில் மண் கலப்படம், கன்டெய்னர்கள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு போன்ற பல்வேறு சிக்கல்களால், 'காயர் பித்' கட்டிகளின் விலை குறைந்து வருகிறது. இதனால், உற்பத்தியாளர்கள் லாபமின்றி துயரப்படுவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு இழப்பு போன்ற சிரமங்களும் ஏற்பட்டுள்ளது.



ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித்திட்ட ஆலோசகர் கௌதமன் கூறியதாவது, கட்டிகள் தயாரிப்புக்கு உலர வைத்த 'காயர் பித்' முக்கிய மூலப்பொருளாக உள்ளது. நடப்பு காலங்களில் நடந்ததை விட நடப்பாண்டு 'காயர் பித்' உலர வைக்கும் போது, 30 சதவீதம் வரையில் மண் கலப்படம் செய்யப்படுகிறது.


எடையை அதிகரித்து அதிக லாபம் ஈட்டுவதர்காக, களம் வைத்திருப்போர் மண்ணை கலந்து 'காயர் பித்' கட்டி தயாரிப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த செயலால் தொழிலை முற்றிலும் முடக்கும்.


போதுமான தரம் இல்லாததால், வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் பலரும், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து கட்டிகள் இறக்குமதி செய்வதை நிறுத்தி வருகின்றனர். இதனால், 'காயர் பித் விலை கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது.



மேலும், ஏற்றுமதிக்கு தேவையான கன்டெய்னர்கள் பற்றாக்குறை மற்றும் வாடகை உயர்வு, எரிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் மோசமான விலையேற்றம், கொரோனா பேரிடர் உள்பட பல காரணங்களால், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில், மண் கலந்து தரம் குறைந்ததால், தயாரித்த கட்டிகளை விற்பனை செய்ய முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். 


இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு கிலோ 'காயர் பித்' விலை கட்டி, 26 முதல் 28 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 18 ரூபாய் வரையில் மட்டுமே விற்பனையாகிறது. அதேபோல் கன்டெய்னர்களின் தட்டுப்பாட்டால் விற்பனை குறைந்து பல தென்னை நார் பொருட்களின் விலை கடுமையாக சரிந்துள்ளன.



தயவுசெய்து மண் கலப்படத்தை தவிர்த்தால் மட்டுமே தொழில் பழைய நிலையை அடையும். அதேபோல், நெருக்கடி நிலையை சமாளிக்க வங்கிகள் 'என்.பி.ஏ.' (நான் பெர்பாமிங் அஸ்செட்) திட்டத்தை 3 மாதங்களில் இருந்து 6 மாதமாக உயர்த்த வேண்டும். 'காயர் பித்'க்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து, 'பீட் மாஸ்' என்ற மாற்றுப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்தியாவில் இதன் இறக்குமதி, ஐந்தாண்டுகளில், 700 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே மத்திய அரசு 'பீட் மாஸ்' இறக்குமதிக்கான வரியை உயர்த்தினால் மட்டுமே இங்கு தயாராகும் 'காயர் பித்' உள்நாட்டில் அதிக அளவு விற்பனையாகும் இவ்வாறு தெரிவித்தார்.



மேலும் படிக்க....


புதினா மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வரை லாபம் கிடைக்கும்! மணக்கும் புதினா சாகுபடி முறைகள்!!


விவசாயிகளுக்கு 75% - 90% மானிய விலையில் பண்ணைக் கருவிகள் பயன்பெற அழைப்பு!!


வேளாண் துறையில் மத்திய பட்ஜெட் 2022ன் ஆக்கப்பூர்வ தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments