தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலேர்ட்- குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கொட்டப் போகிறது கனமழை!!
குறைந்தக்
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலேர்ட்
விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 2 நாட்கள் மிக கனமழை கொட்டி தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்னவென்றால்,
தென்
கிழக்கு வங்கக் கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
உள்ளது. இதனால், தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,
புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிதமான மழை பெய்ய கூடும்.
03.03.2022 வியாழ கிழமை
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிக அதிக கன மழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், மிக கன மழை பெய்யக் கூடும்.
04.03.2022 வெள்ளி
கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிக கன மழை பெய்யும்.
சென்னையில்
இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். வங்க
கடலின் தென்கிழக்கு, அந்தமான் பகுதிகளில் இன்றும், தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு
பகுதிகளில் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்
மேற்கு, மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் வரும், 3ம் தேதியும், தென்
மேற்கு, தமிழக வடக்கு கடலோரம் மற்றும் ஆந்திராவின் தென் கடலோர பகுதிகளில் வரும், 4ம்
தேதியும், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே இந்த நாட்களில்,
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.
மேலும்
படிக்க....
ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு! வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்!!
விவசாயிகளுக்கான கிருஷி யந்த்ரா மானியத் திட்டம்! விவசாய உபகரணங்கள் பாதி விலையில்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...