Random Posts

Header Ads

கொய்யா ஏற்றுமதி வருவாய் 8 ஆண்டுகளில் 260 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை கண்டுள்ளது!!


கொய்யா ஏற்றுமதி வருவாய் 8 ஆண்டுகளில் 260 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை கண்டுள்ளது!!


கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கொய்யா ஏற்றுமதி 260 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 0.58 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த கொய்யா ஏற்றுமதி, 2021-22ம் ஆண்டில் 2.09 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

 

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. பழங்கள் பிரிவில் திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-2021ம் ஆண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு 314 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 



இதர பழங்களின் ஏற்றுமதி 302 மில்லியன் அமெரிக்க டாலராகவும், மாம்பழங்களின் ஏற்றுமதி 36 மில்லியன் டாலராகவும், வெற்றிலை மற்றும் பாக்குகளின் ஏற்றுமதி 19 மில்லியன் டாலராகவும் இருந்தது. இந்தியாவின் மொத்த பழங்கள் ஏற்றுமதியில், திராட்சை மற்றும் இதர பழங்கள் 92 சதவீதம் ஆக உள்ளன.

 

கடந்த 2020-2021ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு 126.6 மில்லியன் டாலர், நெதர்லாந்துக்கு 117.56 மில்லியன் டாலர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 100.68 மில்லியன் டாலர், நேபாளத்துக்க 33.15 மில்லியன் டாலர், ஈரானுக்கு 32.5 மில்லியன் டாலர், ரஷ்யாவுக்கு 32.2 மில்லியன் டாலர், 



சவுதி அரேபியாவுக்கு 24.79 மில்லியன் டாலர் மற்றும் கத்தாருக்கு 22. 31 மில்லியன் டாலர் மதிப்பில் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மொத்தம் முதல் 10 இடங்களில் உள்ள இந்த நாடுகளுக்கு, கடந்த 2020-2021ம் ஆண்டில், இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதியில் 82 சதவீதம் ஏற்றுமதியாகி உள்ளது.

 

யோகர்ட் மற்றும் பனீர் ஏற்றுமதி கடந்த 2013-2014ம் ஆண்டிலிருந்து 200 சதவீதம் அதிகரித்து 2021-2022ம் ஆண்டில் 30 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பால் பொருட்களின் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 


கடந்த 2021-22ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 181.75 மில்லியன் டாலர் அளவுக்கு பால் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு ஆண்டில், இந்த மதிப்பு கடந்த ஆண்டின் ஏற்றுமதியை விட தற்பொழுது அதிகரிக்கவுள்ளது.


 


கடந்த 2020-21ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 39.34 மில்லியன் டாலருக்கும், வங்கதேசத்துக்கு 24.13 மில்லியன் டாலருக்கும், அமெரிக்காவுக்கு 22.8 மில்லியன் டாலருக்கும், பூட்டானுக்கு 22.52 மில்லியன் டாலருக்கும், சிங்கப்பூருக்கு 15.27 மில்லியன் டாலருக்கும், சவுதி அரேபியாவுக்கு 11.47 மில்லியன் டாலருக்கும், மலேசியாவுக்கு 8.67 மில்லியன் டாலருக்கும், 


கத்தாருக்கு 8.49 மில்லியன் டாலருக்கும், ஓமனுக்கு 7.46 மில்லியன் டாலருக்கும், இந்தோனேஷியாவுக்கு 1.06 மில்லியன் டாலருக்கும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முதல் 10 இடங்களில் உள்ள இந்த நாடுகளுக்கு, இந்தியாவின் கடந்த 2020-2021ம் ஆண்டு பால் பொருட்கள் ஏற்றுமதியில் 61 சதவீதம் ஏற்றுமதியாகி உள்ளது.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு 75% - 90% மானிய விலையில் பண்ணைக் கருவிகள் பயன்பெற அழைப்பு!!


தமிழகம் முழுவதும் பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் கட்டாயம்! பயிர் கடன் பெறுவதில் வெளியான அதிரடி அறிவிப்பு!!


தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலேர்ட்- குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கொட்டப் போகிறது கனமழை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments