கூட்டுறவு வங்கி கடன் உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை!!

 


கூட்டுறவு வங்கி கடன் உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை!!

 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கும் கடன் தொகை உச்சவரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என விவசாய சங்கம் ஒன்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

தமிழ்நாடு விவசாய பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், 20 அம்ச கோரிக்கைக் கடிதம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் மற்றும் கௌசிகா நீர் கரங்கள் குழுக்கள் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


அந்த அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள்


  • கிராம அளவில் கிராம விவசாய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

  • பத்திர பதிவு செய்யும்போது விவசாய விளை நிலங்களில் வளரும் மரங்களை விவசாய பயிராக கருதி பத்திரப்பதிவு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

 

  • சந்தனம், தேக்கு போன்ற மரப்பயிர்களை பயிரிடவும்  அவற்றை தேவையான போது வெட்டி விற்கவும் எளிய நடைமுறை கொண்ட சட்ட திருத்தம் தேவை.


  • உரம் பூச்சி மருந்து போன்றவை தரமானதாக கிடைக்க வட்டார அளவில் உரம் பூச்சி மருந்து கடை விற்பனையகம் அரசு சார்பில் திறக்கப்பட வேண்டும். 



  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வழங்கும் கடன் தொகை உச்சவரம்பு 6 லட்சமாக உயர்த்தி தரவேண்டும்.


  • அந்தந்த வட்டாரங்களை சார்ந்த அனைத்து விவசாயிகளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் ஆக்குவதை கட்டாயமாக்க வேண்டும்.


  • கிராம அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் விற்பனையகம் திறக்க வேண்டும்.


  • அனைத்து விவசாயப் பணிகளுக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாயிகள் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.


  • பயிர் காப்பீடு இழப்பீடு கிராம அளவில் சேதமடைந்தாலே தனிநபர்களுக்கு விவசாய இழப்பீடு காப்பீட்டுத்தொகை தரப்பட வேண்டும். 

  • சிறு, குறு விவசாயிகள் உச்சவரம்பு 2 மற்றும் 5 ஏக்கரில் இருந்து 5 மற்றும் 15 ஏக்கர் வரை உயர்த்த சட்ட திருத்தம் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும்.


  • சொட்டுநீர் மானிய உச்சவரம்பை 5 ஹெக்டேரில் இருந்து 10 ஹெக்டராக அதிகப்படுத்த சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்.


  • சொட்டுநீர்ப் பாசன வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.



  • விவசாய விழிப்புணர்வு சுற்று பயணங்களுக்கு விவசாயிகளை சுழற்சி முறையில் தேர்வு செய்ய வேண்டும். 


  • விவசாய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு விவசாய விளை பொருட்களின் ஏற்றுமதிக்கு அரசு தனித்துறை ஒதுக்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.


  • ஒவ்வொரு வருடமும் மற்ற துறைகளை போல் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் சிறந்த விவசாயியை தேர்ந்தெடுத்து பரிசளிப்பு விழா நடத்த வேண்டும். 


  • மும்முனை மின்சாரம் அனைத்து நேரங்களிலும் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 


  • உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் அந்தச் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


கொய்யா ஏற்றுமதி வருவாய் 8 ஆண்டுகளில் 260 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை கண்டுள்ளது!!


தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலேர்ட்- குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கொட்டப் போகிறது கனமழை!!


தமிழகம் முழுவதும் பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் கட்டாயம்! பயிர் கடன் பெறுவதில் வெளியான அதிரடி அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments