மாசி பட்டதிற்கு ஏற்ற எள் இரகங்களை தேர்வு செய்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அழைப்பு!!



மாசி பட்டதிற்கு ஏற்ற எள் இரகங்களை தேர்வு செய்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அழைப்பு!!


பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மாசி பட்டதிற்கு ஏற்ற எள் இரகங்களை தேர்வு செய்து, அதிக மகசூல் பெற்றிடலாம் என விதைப்பரிசோதனை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது குறித்து, பெரம்பலூர் விதைப்பரிசோதனை நிலைய அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதை பரிசோதனை நிலையமானது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு கிழக்கு பகுதியில் மாவட்ட மைய நூலகம் அருகில் செயல்பட்டு வருகிறது. 



இந்நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்ததன்மை மற்றும் பிற இரகக்கலப்பு ஆகியவை இங்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது. 


2021-22 ஆண்டு இந்நிலையத்தின் மூலம் 2820 விதை மாதிரிகள் பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு இதுவரை 2724 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 167 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் விவசாயிகள் கிணறுகளில் உள்ள நீரை பயன்படுத்தி எள் சாகுபடி செய்ய மாசி பட்டதிற்கு ஏற்ற இரகங்கள் டி.எம்.வி-3, டி.எம்.வி-4, டி.எம்.வி-6, டி.எம்.வி-7, கோ-1, வி.ஆர்.ஐ (எஸ்.வி)-1, வி.ஆர்.ஐ (எஸ்.வி)-2 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 (வெள்ளை) 



இது போன்ற எள் இரகங்களுக்கு குறைந்தபட்ச முளைப்புதிறன் 80%, ஈரப்பதம் அதிகபட்சம்-9%, புறத்தூய்மை குறைந்தபட்சம் 97%, இதரக் குறியீடுக்குள் இருக்கும்படியும் விதை பரிசோதனை செய்து, 


ஏக்கருக்கு 2 கிலோ தரமான மற்றும் சுத்தமான விதைகளை தேர்வு செய்து அசோஸ்பைரில்லம்-200 கிராம், பாஸ்போபக்டிரியா 200 கிராம் மற்றும் டைக்கோடெர்மாவிரிடி-8 கிராம் 2 கிலோ விதையை விதை நேர்த்தி செய்து விதைக்கவும் மேலும் விதைப்பு செய்தவுடன், 


நுண் சத்து பற்றகுறையை நீக்கவும் அதிக மகசூல் பெறவும் ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீஸ் சல்பேட் மற்றும் 2 கிலோ துத்தநாக சல்பேட் தெளிக்கவும் இவற்றை செய்வதினால் கூடுதல் எண்ணை சத்துடன் திறட்சியான எள் விதைகளை பெறலாம்.

 


டி.எம்.வி-3

 

தென்னார்காடு உள்ளூர் இரகம்/மலபார்-ன் கலப்பு இரகம்

வயது : 80-85 நாட்கள்

மகசூல் : 625-750 கிலோ/ஹெக்டர்

எண்ணை அளவு-51 சதம்

4-அறைகள் கொண்ட காய் கருப்பு எள்

 

டி.எம்.வி-4


சாத்தூர் பியூர் லைன் தேர்வு

வயது : 85-90 நாட்கள்

மகசூல் : 700-850 கிலோ/ஹெக்டர்

எண்ணை அளவு-50சதம்

4-அறைகள் கொண்ட காய் பிரவுன் எள்

 


இப்படிபட்ட தரமான விதைகளினால் நல்ல விளைச்சலை பெறலாம் விதைப்பு செய்யவுள்ள எள் விதைகள் தரமானதாக உள்ளதா என்பதை கண்டறிந்து விதைத்திட வேண்டும். 


மேலும் சரியான ஈரப்பத்தை அறிந்து விதைகளை சேமிப்பதன் மூலம் பூச்சி, பூஞ்சானத் தாக்குதலிருந்து பாதுகாத்து விதைகளை அதிக நாட்களுக்கு முளைப்புத்திறன் குறையாத பாதுக்காக்களாம். 


அதற்காக விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யப்படவுள்ள, எள் விதைக் குவியல்களிலிருந்து 50 முதல் 100 கிராம் அளவுள்ள விதை மாதிரி விதைகளை எடுத்து மூத்த வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், மாவட்ட மைய நூலகம் அருகில், துறைமங்கலம், பெரம்பலூர் - 621220 என்ற முகவரிக்கு அனுப்பி விதைகளை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.


விதையின் சுத்தத்தன்மை, ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகின்றது. நன்கு சுத்தமான தரமான விதைகளை பயன் படுத்துவதால் வாலிப்பான, பூச்சி நோய் தாக்குதல் இல்லாத செடிகளை பெற முடியும். 



சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர் எண்ணிக்கை இருந்தால் தான் அதிக மகசூல் எடுக்க முடியும். ஒரு பணி விதை மாதிரியினை ஆய்வு செய்திட ஆய்வுக் கட்டணமாக ரூ.30/- மட்டுமே செலுத்த வேண்டும். 


ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். எனவே விதைக்கும் முன் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க வேண்டும் என பெரம்பலூர் விதை பரிசோதனை நிலைய அலுவலர் அ.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்கள். 


மேலும் விவரங்களுக்கு விதை பரிசோதனை நிலைய முகவரிக்கோ அல்லது கைபேசி எண் : 95970 55342 / 96298 94098ல் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.


மேலும் படிக்க....


 கூட்டுறவு வங்கி கடன் உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை!!


புதினா மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வரை லாபம் கிடைக்கும்! மணக்கும் புதினா சாகுபடி முறைகள்!!


விவசாயிகளுக்கு 75% - 90% மானிய விலையில் பண்ணைக் கருவிகள் பயன்பெற அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments