ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், பசுந்தீவன புல் விதைகள், பழக் கன்றுகள்!!
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூபாய் 5000 மானியத்தில் இடுபொருட்கள்
இத்திட்டத்தின்கீழ் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அண்டமி, நெம்மேலி, பாவாஜி கோட்டை, ஓலயகுன்னம், கன்னியாகுறிச்சி, புளியங்குடி மற்றும் வேப்பங்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு,
அவர்களுக்கு வேளாண் துறையின் மூலம் ரூபாய் 5000 மானியத்தில் இடுபொருட்கள் தோட்டக்கலைத் துறையின் மூலம் மாங் கன்று, பலா கன்று, எலுமிச்சை, கொய்யா, போன்ற பழக் கன்றுகள் ரூபாய் 660 மானியத்தில் வேளாண் உதவி இயக்குனர், மதுக்கூர் அவர்களால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
50 சதவீத மானியத்தில் பசுந்தீவன புல் விதைகள்
மேலும் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட ஒரு கறவை மாடு மற்றும் 10 ஆடுகளுக்கு தேவையான கோ 29 புல் விதைகள் இரண்டரை கிலோவும் வேலிமசால் விதைகள் தலா ஒரு கிலோவும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பசுந்தீவனங்களை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் நாமக்கல் கேவிகே இல் இருந்து பெற்று வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு பசுமை பரவலாக்க திட்டத்தின் மூலம் இத்திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் தலா 20 தேக்கு கன்றுகள் வேளாண் அலுவலர் சாந்தி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன், வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு கார்த்திக் சுரேஷ் மற்றும் தினேஷ் மதுக்கூர் கண்காணிப்பாளர் மதியழகன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
45 ஆயிரம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய திட்டம்
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மற்றும் மணிராஜ்
ஆகியோர் செய்திருந்தனர். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் கீழ் செயல்படுத்தப்படும்
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு மேலும் 2 தேனி பெட்டிகள் மற்றும்
வீட்டு காய்கறி தோட்டம் விதைகளும் உள்ளிட்ட மொத்தம் மானியம் தலா 45 ஆயிரம் மதிப்பில்
வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு திட்டம் அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாக
தெரிவித்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
கூட்டுறவு வங்கி கடன் உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...