விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.15,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!




விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.15,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


தற்பொழுது இந்த திட்டம் சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க மானிய உதவிகள் வழங்கப்படுவதாக  அந்த மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு PVC பைப் வாங்க ரூ.15,000 மானியமாகவும், புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.10,000 மானியமாகவும் வழங்கப்படுகிறது.



மானியம் பெற தேவையான தகுதி


விண்ணப்பதாரா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.

 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.

 

தாட்கோ மானிய திட்டத்தில் முன்னுரிமை


தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத SC., ST. விவசாயிகளும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளும், துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவா்களும் இந்த திட்டத்தில் முன்னுரிமை பெற முடியும்.

 


மேலும் விவசாயிகள் தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களில் பயன் பெற்றிருந்தாலும் கூட  இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.


விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்


  • ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று.


  • குடும்ப அட்டை, ஆதார் அட்டை.

 

  • சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு.

 

  • நிலப்பட வரைபடம்.

 

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி.

 

மேலே கூறிய ஆவணங்களை விண்ணப்பதாரா்கள் ஆதிதிராவிடா் இனத்தைச் சாா்ந்தவா்கள் எனில் விண்ணப்பங்களை தாட்கோ இணையதள முகவரியில் இருந்து சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 


கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள தாட்கோ, மாவட்ட மேலாளா் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியை அணுகியோ அல்லது 0427-2280348 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், பசுந்தீவன புல் விதைகள், பழக் கன்றுகள்!!


திறன் வேளாண் தொழில்நுட்பங்கள் வாயிலாக வளங்குன்றா வேளாண்மையின் பங்கு!!


மாடு வளர்க்கும் விவசாயிக்கு, 40,783 ரூபாயும், எருமைக்கு, 60,249 ரூபாயும் கால்நடை கடன் அட்டை மூலம் கிடைக்கும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments