விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு SBI வங்கியில் வாங்குவது எப்படி?

 


விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு SBI வங்கியில் வாங்குவது எப்படி?


மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் குறிப்பாக விவசாயிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுக படுத்தபட்டு உள்ளது.


கிசான் கிரெடிட் கார்டு


மத்திய அரசு கடந்த 1998ம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தியுள்ளது. 



இந்த திட்டம் தேசிய வேளாண்மை இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டத்தால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ளது. 


இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடனானது கிசான் கிரெடிட் கார்டு மூலமாக மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் இதில் எந்தவொரு உத்தரவாதமின்றி ரூ.3 லட்சம் வரை பெற முடிகிறது. இதில் ரூ.3 முதல் 5 லட்சம் வரை கடன் பெற்றால் 4% வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



இதில் அரசு 2% மானியமும் வழங்குகிறது. மேலும் கடனை குறிப்பிட்ட தேதியின் படி திருப்பி செலுத்தினால் 3% தள்ளுபடியும் கிடைக்கிறது. அதனால் விவசாயிகள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் கடனை கால அவகாசத்திற்குள் செலுத்தவில்லையெனில் 7% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தற்போது விவசாயிகள் இந்த கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். இதற்கு முதலாவதாக https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card  என்ற  இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். 


அடுத்ததாக லாகின் தகவல்களை உள்ளிட வேண்டும். இதையடுத்து YONO விவசாயம் என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பின்பு Khata என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து கிசான் கடன் அட்டை மதிப்பாய்வு என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். 



இறுதியாக Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு தங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அலுலர்கள் தங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள். அதன்படி தங்கள் கிசான் கடன் அட்டை 15 முதல் 20 நாட்களுக்குள் கிடைக்கும்.


மேலும் படிக்க....


மாடு வளர்க்கும் விவசாயிக்கு, 40,783 ரூபாயும், எருமைக்கு, 60,249 ரூபாயும் கால்நடை கடன் அட்டை மூலம் கிடைக்கும்!!


கொய்யா ஏற்றுமதி வருவாய் 8 ஆண்டுகளில் 260 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை கண்டுள்ளது!!


தமிழகம் முழுவதும் பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் கட்டாயம்! பயிர் கடன் பெறுவதில் வெளியான அதிரடி அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments