தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் இதை பின்பற்றினாலே போதுமானது!!
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவற்றை முறையாக கட்டுப்படுத்தி சேதத்தை தவிர்க்கலாம். வெள்ளை ஈக்கள் தாக்கிய தென்னை இலைகளின் பின் புறத்தில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும் இவ்வாறு காணப்பட்டால் அது இவைகளின் தாக்குதலுக்கான அறிகுறிகளே.
இளங்குஞ்சுகள், முதிர்ச்சி அடைந்த ஈக்கள் ஓலையின் சாற்றை உறிஞ்சி வளர்ச்சியை பாதிப்படைய செய்கின்றன. இவைகள் வெளியிடும் மெழுகின் மேல் கரும்பூசணம் வளர்வதால் ஓலைகள் கருப்பு நிறமாக மாறி ஒளிச்சேர்க்கை நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மரத்தின் வளர்ச்சி பாதிப்படையும்.
வெள்ளை
ஈக்களைத்
ஏக்கருக்கு
2 விளக்குப் பொறியை இரவில் 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை பயன்படுத்தி அவற்றை 6 அடி உயரத்தில் இரு மரங்களுக்கு இடையே 10 எண்ணிக்கையில்
தொங்க விட்டால் வெள்ளை ஈக்கள் சுலபமாக அவற்றில் சிக்கிக்கொள்ளும்.
விசைத்
தெளிப்பான் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து கீழ் மட்ட ஓலைகளின் உட்பகுதியில் படுமாறு தெளித்துவரலாம்.
ஒட்டுண்ணி குளவி, என்கார்சியா கூட்டுப்புழு இலைத் துண்டுகளை 10 மரங்களுக்கு ஒன்றாக வைத்து
ஈக்களின் குஞ்சுகளை கட்டுப்படுத்தி அழிக்கலாம்.
கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இரை விழுங்கி முட்டைகள் போன்றவற்றை ஏக்கருக்கு 300 அளவில் தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் இவற்றை கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் நீரில் 25 கிராம் மைதா, ஒரு மில்லி ஒட்டும் திரவம் கலந்து தெளிப்பான் உதவியுடன் கரும் பூசணங்களின் மேல் படும்படி தெளித்தால் 3 முதல் 5 நாட்களில் வெயிலில் உதிர்ந்து கீழே கொட்டிவிடும்.
இயற்கை எதிரிகளான
பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணி, கிரைசோபிட் இரைவிழுங்கிகளை வைத்தால் இயற்கையாக
பெருகி ஈக்களை கட்டுப்படுத்தும். இதற்காக சாமந்தி பூ, தட்டை பயறு, சூரியகாந்தியை ஊடுபயிராக
பயிரிடுவது அவசியமாகும்.
தகவல் வெளியீடு
அமர்லால், வேளாண்மை உதவி இயக்குனர், திருப்புல்லாணி,
ராமநாதபுரம்,
94432 26130.
மேலும்
படிக்க....
84 ஆண்டுகளுக்கு பின் கோடையில் புயல் சின்னம் உருவாகியுள்ளது!! வானிலை மையம் தகவல்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...