நஞ்சையில்
உளுந்து விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!
தஞ்சாவூர் மாவட்டத்தில், நஞ்சையில் உளுந்து விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பாருக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
660 ஏக்கரில் விதைப்பண்ணை பதிவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்பொழுது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் 660 ஏக்கரில், வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 11, ஆடுதுறை 5 ரகங்களில் விதைப்பண்ணைகள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மையின் முக்கிய இடுபொருட்கள் விதை, உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் போன்றவை ஆகும். இதில் உரம் மற்றும் பாதுகாப்பு மருந்திலிருந்து விதை என்பது மாறுபட்ட ஒன்றாகும். இதன் முக்கியத்துவத்தை ஈடுகட்ட முடியாது.
இடுபொருட்களின் முக்கியத்துவம்
விவசாயிகள் பயிர் சாகுபடியில் மிகுதியான மகசூல் ஈட்டுவதற்கு பயன் படுத்தப்படுகின்ற இடுபொருட்களின் பெரிய அளவு முக்கியத்துவம் பெற்ற, ஆதாரமான இடுபொருள் விதைகள் ஆகும்.
அதிக அளவில் மகசூல் ஈட்டுவதற்கும்,
வயலில் பயிர் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கும் பயன்படுத்தப்படும் விதைகள் மிகவும் தரமானதாக
இருக்க வேண்டும். எனவே விதையின் தரத்தைப் பாதுகாப்பதன் மூலம் 20-25 சதவிகித அதிக அளவு விளைச்சல்
உறுதி செய்யப்படுகிறது.
இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து நல்ல தரமான விதைகள் விவசாயிகளை சென்றடையவும், விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விற்பனையில் கலப்படம் மற்றும் தரக்குறைவைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு 1966ஆம் ஆண்டு விதை சட்டத்தை நடைமுறை படுத்தியது.
இச்சட்டம்
மொத்தம் 25 பிரிவுகளைக் கொண்டது. 1968ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விதை விதிகள் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 1969 ஆம் ஆண்டு முதல் விதைச் சட்டம் அமலாக்கப்பட்டது. மேலும் விதை
என்பது அத்தியாவசிய பொருள் என்பதால் 1983 ஆண்டு விதைகள் கட்டுப்பாடு ஆணை உருவாக்கப்பட்டு
தற்போதுவரை அமலாக்கப்பட்டு வருகிறது.
பயிர் பாதுகாப்பு முறை
நல்ல தரமான விதை என்பது நிர்ணயிக்கப்பட்ட புறத்தூய்மை, முளைப்புத்திறன், நீர் நயப்பு, கலவன்கள் இல்லாமல் இருக்க வேண்டும். நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்யும் விதைப் பண்ணைகளில் எவ்வித கலன்கள், களை விதைகள் இல்லாமல் வயலின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பூச்சிகள், நோய்கள் போன்றவை தாக்காதவாறு உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். விதைப் பண்ணைகளை பூப்பதற்கு முன்பாகவும் பூக்கும் பொழுதும் பயிர் முதிர்ச்சி அடையும் நிலையிலும் மற்றும் பயிர் அறுவடை நிலையிலும் கலவன் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட வேண்டும்.
தரமான விதைப் பண்ணைகளை பராமரித்து தரமான விதைகளை வழங்குமாறு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தனர்.
மேலும்
படிக்க....
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் இதை பின்பற்றினாலே போதுமானது!!
உங்களிடம் 15,000 ரூபாய் இருந்தால் குறைந்த முதலீட்டில் விவசாயத்தில் 1 லட்சம் வருமானம்!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...