PM KISAN பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடிகளை தவிர்க்க அதிரடி நடவடிக்கை!!
பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடிகளை தவிர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் மோடி முன்னிலையான மத்திய அரசு, 2019ம் ஆண்டில் 'பிரதம மந்திரி கிசான்' (PM Kisan) என்ற பெயரில் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் வாயிலாக ஏழை விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி தற்பொழுது வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் என மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் நிபந்தனைகள்
10 தவணைகளுக்கு மேல் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் பெறும் விவசாயிகள் தங்களுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.
மத்திய - மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினியர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டதின் கீழ் பயன்பெற இயலாது.
நிதியுதவி புகார்
ஆனால், தகுதியற்ற 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இந்த திட்டத்தில் முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை பற்றி மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் ஏழை விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல திட்டங்களில் தகுதியற்றவர்கள் பயன்பெறுகின்றனர்.
விவசாயிகள் நிதியுதவி திட்டத்திலும் இது நடந்துள்ளது. இவற்றை தவிர்க்க, மத்திய அரசு சில புதிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. வருமான வரி நிதியுதவி பெறும் விவசாயிகளை நேரிடையாக அடையாளம் காணப்பட வேண்டும் என, மாநில அரசுகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல், வருமான வரித்துறையிடமிருந்து வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை பெற பட்டு, அதில் விவசாய நிதியுதவி பெற்றவர்களின் பெயர் உள்ளதா என ஆய்வு செய்யவும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு SBI வங்கியில் வாங்குவது எப்படி?
விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.15,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும்
நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன்
அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர
இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...