PM-kisan: ஹோலிக்குப் பிறகு, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும்!!

 


PM-kisan: ஹோலிக்குப் பிறகு, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும்!


PM-kisan திட்டத்தின் 11வது தணைத் தொகை ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பட்டுவாடா செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.


பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இது வரையிலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 10 தவணைகளை செலுத்தியுள்ள மத்திய அரசு, விரைவில் 11வது தவணைத்தை தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த உள்ளது.

 


பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம்  நீங்களும்  இந்த விவசாய நிதி திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு பெரிய முக்கிய செய்தி இருக்கிறது. 


தற்போது வரை விவசாயிகளின் கணக்கில் 10 தவணைகள் பணம் செலுத்தி இருக்கிறது மத்திய அரசு, மிக விரைவில் 11வது தவணைக்கான பணத்தையும் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் தாங்கள் இதுவரை புதிய பதிவு செய்யவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்யுங்கள். 


இந்தத் திட்டத்தின் 11வது தவணைப் பணம் எந்த நாளில் விவசாயிகளின் கணக்கில் மாற்றப்படும் என்பது தற்போது ஊடக வட்டாரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.


10 வது தவணை ஜனவரி 1ம் தேதி மாற்றப்பட்டது


பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 10வது தவணை பணம் ஜனவரி 1, 2022 அன்று விவசாயிகளின் கணக்கில் மாற்றப்பட்டது. நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ.2000 தவணையாக மாற்றப்பட்டது.

 


ஹோலிக்குப் பிறகு கணக்கில் வரும் பணம்

 

PM கிசான் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை விவசாயிகளுக்கு முதல் தவணை பணம் வழங்கப்படுகிறது. அதே வேளையில், இரண்டாவது தவணையின் பணம் ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரைக்கான காலத்தில் மாற்றப்படுகிறது. 


இது தவிர, மூன்றாவது தவணைக்கான பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரைக்கான காலத்தில் மாற்றப்படுகிறது. அதன்படி ஏப்ரல் தொடக்கத்தில் விவசாயிகளின் கணக்கில் 11 தவணை பணம் மாற்றப்படும்.


ஆன்லைனில் பதிவு செய்யலாம்

 

இந்த திட்டத்தில் நீங்கள் இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், நீங்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் பதிவு செய்யும் செயல்முறை மிகவும் எளிதானது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், பொது சேவை மையத்திற்கும் சென்று தாங்கள் பதிவு செய்துகொள்ளலாம்

 


இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்

 

2 ஹெக்டேர் அதாவது 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே PM கிசான் திட்டத்தின் பலன் கிடைக்கும், ஆனால் எந்த விவசாயி வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அந்த விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.  


இது தவிரமேலும் இந்த ஆவணம் கட்டாயம் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் முறைகேடு

 

இத்திட்டத்தின் கீழ் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஏதுவாக, மத்திய அரசு ரேஷன் கார்டை அவசியமாக்கியுள்ளது. சமீபகாலமாக அரசின் இந்த கிசான் திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகள் பலர் பயன் பெறுவது தெரியவந்தது. 



இது போன்ற அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை எந்த விவசாயியும் புதுப்பிக்கவில்லை என்றால், அவரது 11வது தவணை பணம் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க....


விவசாயிகளே!! உர விலையை உயர்த்தத் திட்டம்! விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!


PM KISAN பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடிகளை தவிர்க்க அதிரடி நடவடிக்கை!!


நஞ்சையில் உளுந்து விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments