தமிழ்நாட்டில் மார்ச் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழ்நாட்டில் மார்ச் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் நீடிக்கிறது. 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை அடுத்த 36 மணி நேரத்தில் நெருங்கும் என வானிலை மையம் தெரிவித்தது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகரும் திசையில் தற்போது இருப்பதாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், இன்று தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று 7ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மார்ச் 8ம் தேதி கோவை, நீலகிரி,
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்
சென்னை வானிலை மையம் தகவல் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று, நாளை 5 மாவட்டங்களில்
பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பிறகு தரையில் ஏற்படக் கூடிய உராய்வின் காரணமாக காற்றின் வேகம் குறையும் எனவும், இதன் காரணமாக மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்றி வீச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் தகவல்!!
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...