விவசாயிகளின் வருவாயை பெருக்க இயற்கை வேளாண்மையில் வேளாண் கழிவுகள் மேலாண்மை!!
தேவைப்படும் புதிய செயல் திட்டங்கள்
நமது நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை (Natural Farming) பணிகளை வேளாண் பல்கலைக்கழகங்கள் வேளாண் மாணவர்களை இணைத்து மேற்கொள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2022-23 வழிகாட்டுகிறது.
குறிப்பாக நமது நாட்டின் இறக்குமதியில் எண்ணெய் வித்து பயிர்கள் கடந்த வருடத்தை காட்டிலும் ரூ.72,000 கோடிகள் வரை அதிகரித்துள்ள சூழலில் நாம் பற்றாக்குறை உள்ள பயிர்கள் சாகுபடியில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய உள்ளது.
இத்தகைய நடைமுறை சூழலில் மத்திய அரசின் சார்பில் வேளாண் கழிவுகள் மேலாண்மை வாயிலாக விவசாயிகளின் வருவாயை பெருக்கவும், அவர்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக தற்போதைய வேலை கல்வி பாடத்திட்டத்தில் கூட சந்தையின் நடைமுறை தேவைகள் அடிப்படையில் புதிய பாடத் திட்டங்களை முன்னோடி விவசாயிகளை இணைத்து உருவாக்கும் புதிய வேளாண் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர வேளாண் தரவுகள் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பங்களை கொண்டு வேளாண் பணிகளை திட்டமிடவும், விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முயன்று வருகிறது.
கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் 100 புதிய துவக்க நிறுவனங்கள் (Startups) துவக்கப்பட்டு இயற்கை வேளாண் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது நாட்டில் இயற்கை வேளாண் சந்தை ரூ.11,000 கோடிகள் என்ற அளவில், இதில் ஏற்றுமதி வாய்ப்புகள் ரூ.7000 கோடிகள் அளவிற்கு உள்ளது. இதனை பெருக்கவும், நமது நாட்டின் எதிர்கால வேளாண் வளர்ச்சி,
கிராமப்புற முன்னேற்றம் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரிடம் போதிய விழிப்புணர்வை இயற்கை வேளாண்மையில் மேற்கொள்ள ஒவ்வொரு வேளாண் அறிவியல் மையமும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும்,
நமது நாட்டில் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களின் சேவைகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவும் ஆக்கப்பூர்வமான வழிகாட்டல் மற்றும் திட்டமிடுதல் வாயிலாக புதிய செயல்திட்டங்கள் மற்றும் விரிவாக்கப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக இயற்கை வேளாண் பணிகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் நமது நாட்டில் வேளாண் துறை சந்திக்கும் பல நடைமுறை பருவ மாற்று பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் சிறந்த தீர்வுகளை தரும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரை வெளியீடு
முனைவர் தி.ராஜ் பிரவீன், இணைப்பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத்துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
மேலும் படிக்க....
PM KISAN பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடிகளை தவிர்க்க அதிரடி நடவடிக்கை!!
விவசாயிகள் வங்கிக் கணக்கில் பருவ மழை நிவாரணமாக ரூ.20,000 வரவு வைக்கப்படும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும்
நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன்
அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர
இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...