விவசாயிகளுக்கு PVC குழாய் பாசனத்திற்கு ரூ.15,000 அல்லது 50% சதவீதம் மானியம்! வேளாண்துறை அறிவிப்பு!!

 


விவசாயிகளுக்கு PVC  குழாய் பாசனத்திற்கு ரூ.15,000 அல்லது 50% சதவீதம் மானியம்! வேளாண்துறை அறிவிப்பு!!


தாட்கோ மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளார்.

 

PVC தண்ணீர் குழாய்கள்


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அவர்கள் தங்கள் நில மேம்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் PVC தண்ணீர் குழாய்கள் வாங்குவதற்கு 50% சதவீதம் மானியமாகவும் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 மானியமாக  வழங்கப்படும் என அவர் கூறினார்.



விண்ணப்பதாரருக்கு வேண்டிய தகுதிகள்


விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் இருக்க இருக்க வேண்டியது கட்டாயம். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.  தாட்கோ மானிய திட்டத்தில் இதுவரை பயனடையாத ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 

இதுமட்டும் இன்றி மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே, தாட்கோ திட்டத்தில், நிலம் வாங்குதல், மேம்படுத்தும் திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் போன்றவற்றில் பயன் பெற்றிருந்தாலும் கூட விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முன்னுரிமை உண்டு.


விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்


விண்ணப்பதாரர் சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்பஅட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, புகைப்படம், பட்டா, சிட்டா, அடங்கல், ‘அ' பதிவேடு, புலப்பட வரைபடம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றுடன், 


ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ இணையதளமான http://application.tahdco.com/ என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


 மேலும் விபரங்களுக்கு


கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 என்ற அலுவலக முகவரியில் நேரில் சென்று விவரம் அறியலாம். 



04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.15,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


விவசாயிகள் வங்கிக் கணக்கில் பருவ மழை நிவாரணமாக ரூ.20,000 வரவு வைக்கப்படும்!!


விவசாய பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்துறை அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments