விவசாயம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புதிய நடவடிக்கை!!
வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் தனி நிதிநிலை அறிக்கையில் வேளாண்மையின் முன்னோடியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 'பரிசு' என்ற தலைப்பின் கீழ் இயற்கை வேளாண்மை சாகுபடி, விளைபொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசளிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் பழமையான பாரம்பரியமிக்க முறையை பின்பற்றி அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளையும், வேளாண்மை ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் ஏற்றுமதியாளர்களையும், மேலும் உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், இயந்திரங்கள் போன்றவற்றை கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மாநில அளவில் ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள்,
‘வேளாண்மையில் புதிய உள்ளூர் கருவி கண்டுபிடிப்புகள் குழுவிலும், வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம் குழுவிலும், ‘இயற்கை வேளாண்மை சாகுபடி’ குழுவிலும், ‘வேளாண்மை விளைபொருட்கள் ஏற்றுமதி’ குழுவிலும் தகுதியுள்ள விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிடைக்கும் எனவும், மேற்படி அதனை பூர்த்தி செய்து பதிவு கட்டணமாக ரூ.100/- மட்டும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் உரிய அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.03.2022 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அரிய வாய்ப்புகளை தகுதியுள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் என அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிசாமி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்
படிக்க....
விவசாயிகளின் வருவாயை பெருக்க இயற்கை வேளாண்மையில் வேளாண் கழிவுகள் மேலாண்மை!!
அதிக தழை சத்துக்கொண்ட பசுந்தாள் உர உற்பத்தி தொழில்நுட்ப முறைகள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...