பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு! வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!



பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு! வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!


இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக திகழ்வது மட்டுமல்லாது இறக்குமதியாளராகவும் உள்ளது. இந்திய அரசின் வேளாண் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2021-2022ஆம் ஆண்டின் 26.96 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 


மேலும், 2019-2020ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பருப்பு உற்பத்தியில் 23.02 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. இதில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு, நாட்டின் மொத்த பருப்பு உற்பத்தியில் 16.93 மற்றும் 10.04 சதவீதம் பங்களிக்கின்றது.

 


உளுந்து


வேளாண் நல அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2021-2022ஆம் ஆண்டின் 2.66 மில்லியன் டன்கள் உளுந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், உத்திரபிரதேசம், தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை உளுந்து அதிக அளவில் பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும். இம்மாநிலங்கள் சேர்ந்து நாட்டின் மொத்த உளுந்து உற்பத்தியில் 89 சதவீதம் பங்களிக்கின்றன. 


இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகியவை உளுந்து இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாகும். இந்த நாடுகள் முக்கியமாக மியான்மா், தாய்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன.



தமிழ்நாட்டில் பொதுவாக 4.05 இலட்சம் எக்டர் பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டு 3.17 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகியவை உளுந்து உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். 


ஏ.டி.டீ 3, ஏ.டி.டீ 4, ஏ.டி.டீ 5, கே.கே.எம் 1, கோ 6, வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ஆகிய உளுந்து இரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது, உளுந்து வரத்தானது ஆந்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரத்தொடங்கியுள்ளது. 


மேலும், தமிழ்நாட்டிலிருந்து வரத்தானது வரும் மார்ச் முதல் வாரத்திலிருந்து வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உளுந்தானது உள்நாட்டு சந்தையின் விலையை பாதிக்கும் என வர்த்தக மூலகங்கள் கூறுகின்றன.

 


பச்சைப்பயறு

 

வேளாண் நல அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2021-2022ஆம் ஆண்டின் 3.06 மில்லியன் டன்கள் பச்சைபயிறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கா்நாடகா, பீகார், ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். 


இம்மாநிலங்கள் சேர்ந்து நாட்டின் மொத்த பச்சைப் பயறு உற்பத்தியில் 79 சதவீதம் பங்களிக்கின்றன. மியான்மர், சீனா, தான்சானியா, மொசாம்பிக் மற்றும் இந்தோனேசியா ஆகியவை பச்சைபயிறு இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாகும்.


 


தமிழ்நாட்டில் சுமார் 1.71 இலட்சம் எக்டர் பரப்பளவில் பச்சைப் பயறு பயிரிடப்பட்டு 0.76 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், திருவள்ளூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவை தமிழகத்தில் பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். 


கோ 6, கோ 7, கோ 8 மற்றும் வம்பன் 3 ஆகிய பச்சைப் பயறு இரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தியாவின் தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆனது இப்பயிர்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் ஆகும். 


தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பச்சைப்பயிர் கொள்முதல் ஏற்கனவே பிப்ரவரியில் தொடங்கிவிட்டது மற்றும் உளுந்து திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

 


இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய உளுந்து மற்றும் பச்சைப்பயறு விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.


ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான உளுந்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.65-67 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான பச்சைப் பயறு சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.63-65 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


மேலும், பிற மாநிலங்களிருந்து வரும் வரத்து மற்றும் இறக்குமதியை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். தற்போது, நெல் தரிசு பகுதிகளில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு அறுவடை தொடங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட சந்தை ஆலோசனை கொண்டு விற்பனை முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

 


மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் அல்லது இயக்குனர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு பாசன விவசாய நவீன மாயமாக்கல் திட்டம், நீர் தொழிட்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. 


தொலைபேசி -0422-2431405. தொழில்நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பயறுவகைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி – 0422-2450498 தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க தாட்கோ மூலம் ரூ.25,000 மானியம்!!


50% சதவீத மானியத்தில் நேரடி நெல் விதைப்பு கருவிகள்!! ரூ.2500 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்!!


PM Kisan விவசாயிகளுக்கு 11- வது தவணை எப்போது? FTO is Generated உங்களின் நிலை என்ன?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments