50 கிலோ DAP மூட்டை 1,200 ரூபாய்க்கு விற்பனை! DAP க்குபதிலாக சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ மூட்டை 355 மட்டுமே!!
பயிர்களுக்கு
DAP உரத்திற்கு பதிலாக, சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற
விழிப்புணர்வு பிரசாரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேளாண் துறையினர் தற்போது துவங்கியுள்ளனர்.
நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பலவகை பயிர்களுக்கு தழைச்சத்து, கந்தக சத்து, சுண்ணாம்பு சத்து போன்றவை கிடைக்க, DAP உரம் போதுமான அளவு விவசாயிகளிடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. DAP, உரம் தயாரிக்கும் மூலப்பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
தற்போது, DAP உரத்தின் மூலப்பொருட்கள் விலை பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக அதிகரித்து உள்ளது. இதனால், 50 கிலோ எடை கொண்ட DAP உர முட்டை 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளின் சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. விவசாயிகள் செலவினமும் அதிகரித்துள்ளது
DAP-யை
அதிகளவில் இறக்குமதி செய்வதால், அரசிற்கு அன்னிய செலாவணி அதிக அளவில் உயருகிறது. இறக்குமதி
செய்து கையாள்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இதற்கான மாற்று ஏற்பாட்டை வேளாண் துறையினர்
புதியதாக துவங்கி உள்ளனர். DAP-யில் உள்ளது போன்ற சத்துக்கள், சூப்பர் பாஸ்பேட் உரத்திலும்
அதே அளவு உள்ளன.
நம் தமிழகத்திலேயே மூன்று நிறுவனங்களில் சூப்பர் பாஸ்பேட் உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இதன் 50 கிலோ மூட்டை 355 முதல் 425 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதி இறக்குமதி செலவினத்திற்கு ஏற்றார் போல விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதால், விவசாயிகள் சாகுபடி செலவை கணிசமாக கட்டுப்படுத்த முடியும்.
மேலும் உரங்களின் தட்டுப்பாடு ஏற்படும் வேளைகளில், கூடுதலாக சூப்பர் பாஸ்பேட் உரங்களை உள் நாட்டிலேயே
உடனுக்குடன் உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும்.
எனவே, விவசாயிகள் DAP-க்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த வேளாண் துறை உயர் அதிகாரிகள், நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை துவங்க, மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும்
படிக்க....
பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு! வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க தாட்கோ மூலம் ரூ.25,000 மானியம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...