விதை நெல் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை!!



விதை நெல் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை!!


கார் பருவத்தில் நெல் சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் நெல் விதைகளை விற்பனை நிலையங்களில் வாங்கும் போது சான்று பெற்ற விதைகளை வாங்க வேண்டும்.


சான்று பெற்ற விதைகள் என்பது உற்பத்தியாளர்களால் உரிய விதை ஆதாரம் கொண்டு விதைப்பண்ணை அமைத்து அவ்விதைப்பண்ணையை விதைச்சான்றளிப்பில் பதிவு செய்து விதைச்சான்று அலுவலர்களால் பூப்பருவம் மற்றும் பயிர் முதிர்ச்சி பருவத்தில் வயலாய்வு செய்து பயிர்களில் கலவன்கள், குறித்து அறிவிக்கப்பட்ட நோய் உள்ளதா என கண்டறிந்து பயிர் மகசூல் கணித்து பயிர் அறுவடைக்கு அனுமதி அளிப்பார்.



பயிர் அறுவடைக்கு பின்னர் பின் செய் நேர்த்திக்கு செய்து உற்பத்தியாளர்கள், விதைச்சான்று அலுவலர்கள் சுத்தி அறிக்கை பெற்று விதைச்சான்று துறை உரிமம் வழங்கப்பட்ட விதை சுத்தி நிலையத்தில் விதைச்சான்று அலுவலர் முன்னிலையில் சுத்தி செய்து விதை மாதிரி எடுத்து விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. 


விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ரகசிய குறியீட்டு எண் தெரிவிக்கப்பட்டு விதை மாதிரி விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.


விதைப்பரிசோதனை நிலையத்தில் விதையின் சுத்த தன்மை அதாவது கல், மண் மற்றும் பதர் விதையில் எவ்வளவு உள்ளது என கண்டறியப்படுகிறது. பின்னர் விதையின் ஈரப்பதம் கண்டறியப்படுகிறது. விதையின் முளைப்புத்திறன் கண்டறியப்படுகிறது. 



விதையில் பிறரக கலப்பு உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் விதைச்சட்டம் 1966 பிரிவு 7(பி)ன்படி குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


தரமான சான்று பெற்ற நெல் விதை என்றால் சுத்த தன்மை 98 சதம் குறைந்த பட்ச முளைப்புத்திறன் 80 சதம் அதிக பட்ச ஈரப்பதம் நெல்லுக்கு 13 சதம் மற்றும் பிறரக கலவன் 0,20 சதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து பயிர்களுக்கும் விதை தரம் தனியாக உள்ளது


எனவே, சான்று பெற்ற விதை என்றால் விதை உற்பத்தியாளர்கள், விதை உற்பத்தி செய்வதை விதைச்சான்று துறையினர் கண்காணித்து வயல்தரம் தேறி விதைப்பரிசோதனையில் விதைத்தரம் தேறிய பின்னரே நீலநிற மற்றும் வெள்ளைநிற சான்றட்டை மற்றும் பச்சைநிற உற்பத்தியாளர் விவர அட்டை பொருத்தப்பட்டு விதை விநியோகம் செய்யப்படுகிறது,



எனவே, விவசாயிகள் விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் பொழுது சான்றட்டை மற்றும் உற்பத்தியாளர் விவர அட்டைகளில் உள்ள விதை காலவாதியாகும் நாள் அறிந்து வாங்க வேண்டும். 


மேலும் விற்பனை நிலையங்களில் விவசாயிகள் விதைகள் வாங்கும் பொழுது விற்பனை பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விதைக் குவியல் எண் குறிப்பிட்டு வாங்க வேண்டும் என திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஜா.ரெனால்டா ரமணி தெரிவித்தார்.

 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


50 கிலோ DAP மூட்டை 1,200 ரூபாய்க்கு விற்பனை! DAP க்குபதிலாக சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ மூட்டை 355 மட்டுமே!!


தரமான நிலக்கடலை விதை உற்பத்திக்கு பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள்!!


பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு! வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments