இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் வேளாண் சார்ந்த வானிலை முன்னறிவிப்பு!!



இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் வேளாண் சார்ந்த வானிலை முன்னறிவிப்பு!!


காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கி உள்ளது.

 

வானிலை முன்னறிவிப்பு இன்று முதல் 16.03.2022, 8.30 மணி வரையினாது வருமாறு


மேக மூட்டம் தெளிவாக காணப்படும் பெரும்பாலும் தெளிவாக காணப்படும் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பின்றி வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 35-36 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்சமாக 23-24 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்பு உள்ளது.



மேலும் காற்றானது மணிக்கு 06 - 10 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு – கிழக்கு திசையில் வீசலாம். காற்றின் ஈரப்பதமானது 50-75% வரை பதிவாக்கலாம். பகலில் வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படலாம்.

 

வரும் 16.03.2022 – 22.03.2022 தமிழ் நாடு மற்றும் புதுவையை பொறுத்த வரையில் இயல்பை விட குறைவான மழை மற்றும் குறைந்தபட்ச & அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவு பதிவாக்கலாம்.

 

வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்

 

நிலக்கடலையில் காய்களின் வளர்ச்சி மற்றும் விதை திரட்சியை ஊக்குவிக்க TNAU நிலக்கடலை ரிச் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் தெளிக்கலாம். மழைக்கு வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மண்ணின் ஈரப்பத்தினை நன்கு தெரிந்து கொண்டு பயிர்களுக்கு பாசனம் செய்யலாம்.

 


தூர் கட்டும் & கதிர் வரும் பருவ நெல்: நெல் வயலில் தண்டுத் துளைப்பான்கள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சி தாக்குதலின் அறிகுறிகளான முழு தானியக் கதிர்களும் காய்ந்து வெண்கதிர்கள் காணப்பட்டால் ஹெக்டருக்கு குளோரோடேரினிலிபுருள் 150 கிராம் அளவில் தெளித்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

 

முதிர்ச்சி பருவ பயறு வகை: உளுந்து பயிரில் காய்த் துளைப்பான் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் இதனை கட்டுப்படுத்த டைகுளோர்வாஸ் 625 மி.லி/ஹ என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

முதிர்ச்சி பருவ நிலக்கடலை: நிலக்கடலையில் பின் பருவ இலைப்புள்ளி நோய் தாக்க வாய்ப்புள்ளதால் நோயினை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி தெளித்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

 


காய்க்கும் பருவ மிளகாய்: மிளகாயை வெள்ளை ஈ மூலம் பரவும் இலை சுருட்டு நோய் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நோய் தாக்கிய அணைந்து செடிகளையும் அழித்துவிட்டு டைமெத்தோயேட் 2 மிலி (அ) அசிப்பேட் 1 கிராம் /லிட்டர் நீரில் கரைத்துத் தெளித்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

 

காய்க்கும் பருவ கத்திரி: காய்க்கும் பருவத்தில் உள்ள கத்திரி பயிரை காய் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சியை கட்டுப்படுத்த எமாமெக்டின் பென்ஜொவேட் 5 % SG மருந்தினை 4கிராம் /10 லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். 


கத்திரி பயிரை சிற்றிலை (அ) சிறு இலை நோய் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நோயினை பரப்பும் பழுப்புத் தத்துப் பூச்சியை கட்டுப்படுத்த டைமீதோயேட் 0.3 சதம் தெளிக்கலாம்.


மா மரத்தில் இலை மற்றும் பூக்களை புழுக்கள் மெல்லிய நூலிழையினால் அடுத்தடுத்த இலைகளை பிணைத்து விட்டு உள்ளிருந்து பச்சையத்தை கொறித்து உண்ண வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சிக்கு எதிரியான இயற்கை எதிரிகளை வயலில் பெருக்கமடைய செய்து இதனை கட்டுப்படுத்தலாம்.

 


கறவை மாடுகள்: விவசாயிகள் கறவை மாடுகளுக்கு சமசீர் ஊட்டமாக அடர் தீவனத்துடன் 20-25 கிலோ பசுந்தீவனத்தினை கொடுக்கலாம். விவசாயிகள் கால்நடைகளுக்கு 30-50 கிராம் தாதுப்பை அடர்த்தீவனத்துடன் கொடுத்தால் பாலில் கொழுப்பு சத்தினை அதிகப்படுத்தலாம்.

 

செம்மறி மற்றும் வெள்ளாடு: விவசாயிகள் ஆடுகளுக்கு அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை தவிர்க்க உண்ணி நீக்கம் செய்ய குடல்புழு நீக்கம் செய்து பாதுகாக்கலாம். விவசாயிகள் ஆட்டுக்கொட்டகையில் தாது உப்பு கட்டிகளை கட்டிவைப்பதன் மூலமாக ஆடுகளில் வளர்ச்சி விகிதத்தினை அதிகப்படுத்தலாம்.

 

கோழி பண்ணை வைத்திருப்பவர்கள் கோழிகளுக்கு சுத்தமான குடிநீரை 3 முறை அளிப்பதினால் கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப தாக்கத்தினை தணிக்கலாம். ஓரு கோழிக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் அசோலாவை தீவனமாக அளிப்பதினால் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

 

உள்நாட்டு மீன் வளர்ப்பு: வரும் ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை குறைந்து காணப்படும் என்பதால் மீன் தீவனங்களை காலை வேளையில் ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் அளிக்கலாம். வரும் ஐந்து நாட்களுக்கும் மழை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்பட்டால் மீன்/இறால் தீவனங்களை உலர்த்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் பூஞ்சைகள் தாக்கத்திலிருந்து தடுக்க முடியும். 


மீன்களில் ஏற்படும் நோய் தொற்றினை அறிய விவசாயிகள் காலை அல்லது மாலை நேரங்களில் மீன் குளங்களில் மீன் மாதிரிகளை சேமித்து நோய்க்கான அறிகுறிகளை ஆராய்ந்து தக்க மேலாண்மை முறைகளை மேற்கொள்ளலாம்.

 

குளத்து நீரின் ஒளி உட்புகாத ன்மையை ஆராய்ந்து அதனை 30-45 செ.மீ. வரை பராமரிக்கலாம். மேலும் குளத்து நீரில் கரும்பச்சை நிறம் தென்படுமாயின் பண்ணையாளர்கள் 10% வரை நீரை மாற்றியும் அல்லது 100-200 கிலோ/ ஹெக்டருக்கு வேளாண் சுண்ணாம்பும் அளிக்கலாம். 


உலர் மீன்கள் உற்பத்தி செய்யும் மீனவர்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு 3 கிலோ மீன்கள் என வைத்து உலரவைக்கலாம். அலங்கார மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன் தொட்டிகளில் அமோனியா அளவை கட்டுப்படுத்த மீன் தொட்டிகளில் கழிவுகளை வெளியேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 


தகவல் வெளியீடு


முனைவர் சு.கங்காதரன், முனைவர் மா.சித்தார்த், முனைவர் மா.விமலாராணி, முனைவர் காயத்திரி சுப்பையா, முனைவர் க.தேவகி, முனைவர் கி.சிவகுமார், மா.ராஜேஸ்கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு. 99405 42371, 94428 38015, 85080 59752.

 

மேலும் படிக்க....


விதை நெல் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை!!


பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு! வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!


50 கிலோ DAP மூட்டை 1,200 ரூபாய்க்கு விற்பனை! DAP க்குபதிலாக சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ மூட்டை 355 மட்டுமே!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Post a Comment

0 Comments