ஒரு விவசாயிக்கு 75%-90% வரையில் மானியம்! அதிகபட்சமாக ரூ.2700 வரையில் பெறலாம்!!

 


ஒரு விவசாயிக்கு 75%-90% வரையில்  மானியம்! அதிகபட்சமாக ரூ.2700 வரையில் பெறலாம்!!


வேளாண் கருவிகள் வாங்க 90% சதவீதம் மானியம்


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஆனைமலை வட்டாரத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் வேளாண் கருவிகள் வாங்க 90% சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இக்கருவிகளை வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரியப்படுத்தி உள்ளனர்.

 

பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். இப்பேற்பட்ட விவசாயத்தின் முதுகெலும்பாக கதிர் அரிவாள், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு சட்டி, களை கொத்து, உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவைதான் விவசாயிகளுக்கு அன்றாடம் பயன்படும் பொருட்களும் ஆகும். 



கீழ் கண்ட உபகரணங்களை மானியம்


விவசாய பணியில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கதிர் அரிவாள், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு சட்டி, களை கொத்து, போன்ற உபகரணங்கள் மானிய விலையில் வாங்க விவசாயிகளுக்கு வாய்ப்பு  வழங்கப்படுகிறது. 

 

ஒரு விவசாயிக்கு தலா ஒன்று வீதம், சிறு குறு விவசாயிகளுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையம் மூலமாக மானியத்தில் இக்கருவிகள் வழங்கப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு, 3,000 ரூபாய் ஆகும். 



விவசாயிகளில் 75%-90% வரையில்  மானியம்


சிறு, குறு விவசாயிகளில் பொதுப்பிரிவினருக்கு, 75% சதவீத மானியமாக அதாவது, ரூ. 2,250 அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் SC., ST., பிரிவு விவசாயிகளுக்கு, 90% சதவீத மானியமாக, ரூ. 2,700-யை அரசு வழங்குகிறது. மீதமுள்ள தொகை மற்றும் வரியைச் செலுத்தி, விவசாயிகள் கருவிகளை பெற்றுக் கொள்ளலாம்.


கருவிகள் பெற முன்னுரிமை


கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

 

தேவைப்படும் ஆவணங்கள்


  • சிறு, குறு விவசாயிகள் சான்று

 

  • ஆதார் அட்டை நகல்

 

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


  • நிலத்தின் சிட்டா


எப்படி விண்ணப்பிப்பது?


இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், மேலேக் கூறிய அனைத்து ஆவணங்களுடன், தங்கள் பகுதி வேளாண் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என, வேளாண் உதவி இயக்குனர்கள் அறிவித்துள்ளனர்.





மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க தாட்கோ மூலம் ரூ.25,000 மானியம்!!


50% சதவீத மானியத்தில் நேரடி நெல் விதைப்பு கருவிகள்!! ரூ.2500 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்!!


விவசாயம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புதிய நடவடிக்கை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments