PM Kisan திட்டத்தை மேலும் வெற்றிகரமாக செயல்படுத்த அரசின் பல்வேறு நடவடிக்கைகள்!!
30 மார்ச் 2022 அன்று மக்களவையில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் PM Kisan திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள பயன்கள் அனைத்து சரிபார்ப்பு நிலைகளையும் தெளிவுபடுத்திய பிறகு, அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களிலிருந்து தகுதியுடைய விவசாயிகளின் சரியான தகவல்களைப் பெற்றவுடன் நேரடி பணபரிமாற்ற முறை மூலம் விவசாயிகளுக்கு மாற்றப்படுகிறது என அவர் கூறினார்.
இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும் என்றும், பிரதமர் கிசான் திட்டத்தின் பலன்கள் ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளுக்கு மூன்று சமமான தவணைகளில் பணம் வாங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அல்லது யூனியன் பிரதேசங்களிலும் PM Kisan யோஜனாவை வெற்றிகரமாக செயல்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அவற்றில் சில பின்வருமாறு:
விவசாயிகளின் தகவல்களை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிவேற்றம் செய்வதற்கும் அதன் முதல் நிலை சரிபார்ப்புக்கும் PM-Kisan இணையதளத்தை தொடங்குதல்.
PM kisan இணையதளத்தை UIDAI, PFMS, வருமான வரி போர்ட்டல் & ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பணியாளர்கள் பதிவேடுகளை சரிபார்த்தல் அல்லது தகுதியற்ற பயனாளிகளை திட்டத்தில் இருந்து நீக்குதல் மற்றும் தகுதியற்ற பயனாளிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான NTRP இணையதளம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இணையதளத்தில் விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்யலாம், அவர்களின் கணக்கு நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம், ஆதார் விவரங்களைத் மாற்றி அமைக்கலாம். மேலும் விவசாயிகள் இந்த வசதிகள் அனைத்தையும் பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவும் பெறலாம்.
PM KISAN போர்ட்டலின் விவசாயிகள் அனைத்து செயல்பாடுகளையும் மொபைல் போனில் வழங்க PM Kisan மொபைல் செயலியின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தகுதியுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே நிதியுதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஆள் சரிபார்ப்பு, இ-கேஒய்சி போன்ற பல்வேறு சரிபார்ப்பு பயிற்சிகளை செயல்படுத்துதல்.
திட்டத்தின் தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான மீட்பு வழிமுறையை உருவாக்குதல், தொழில்நுட்ப மற்றும் கொள்கை சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தீர்க்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் வழக்கமான வீடியோ மாநாடுகளை நடத்துதல்.
PM Kisan யோஜனாவை சரியாகசெயல்படுத்த, மத்திய அளவில் திட்டக் கண்காணிப்புப் பிரிவை அமைத்தல், தேசிய விவசாயிகள் நலத் திட்ட அமலாக்கச் சங்கங்கள் உருவாக்குதல். ஜார்க்கண்ட், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேகாலயா போன்ற இடங்களில் சிறப்புத் தலையீடுகளை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும்
படிக்க....
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசின் மகத்தான இரண்டு திட்டங்கள்!!
PM கிசான் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி e-kyc முடிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...