ஒரு விவசாயிக்கு ரூ.2,500 மற்றும் உரங்கள், இடுபொருட்கள் மானிய விலையில் வேளாண்துறை அறிவிப்பு!!
உழவன் செயலியில் பதிவு
விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரங்கள் பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என வேளாண் துறை அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் தென்னை மற்றும் நெற் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க 50% சதவீத மானிய விலையில் உரங்கள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் உழவன் செயலியில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டியதுக் கட்டாயம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து வேளாண்துறையினர் தெரிவித்திருப்பது
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டாரத்தில் ‘கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி’ திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 50% சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கானப் போதுமான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.2,500 பின்னேற்பு மானியம்
தென்னை சாகுபடியில் உழவு மேற்கொள்ளவும் வட்டப் பாத்திகளில் தக்கைப் பூண்டுகளை விதைத்து மடக்கி உழுவதற்கும் பின்னேற்பு மானியமாக ரூ.2,500 வழங்கப்பட உள்ளது.
குரும்பைகள் உதிர்வதை தடுப்பதற்காகவும், மகசூல் அதிகரிப்பை மேம்படுத்தவும் உயிர் உரங்கள் மற்றும் போராக்ஸ் நுண்ணூட்டச்சத்துகள் வேளாண்மைத் துறையின் மூலம் 50% சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
மகசூல் அதிகரிக்க 50 சதவீத மானியம்
நெற் பயிர்களுக்கு ஜிப்சம் மற்றும் துத்தநாக சல்பேட் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. நெற்பயிரில் இளம் பயிர்களின் தூர் வளர்ச்சிக்கும், வளர்ந்த பயிரின் விளைச்சலை அதிகரிக்கவும், துத்தநாகச் சத்து மிகவும் அத்தியாவசியமானது.
நெல்வயல்களில் காற்றோட்டம் அதிகரிக்க இரண்டாம் நிலை ஊட்டச்சத்து கால்சியம் மற்றும் கந்தகம் சேர்ந்த ஜிப்சம் உரங்களை பயன்படுத்த வேண்டும். எனவே, ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான துத்தநாக சல்பேட் 10 கிலோ அல்லது ஜிப்சம் 200 கிலோ உள்ளிட்டவை 50% சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
மேலும், பனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வரப்பு ஓரங்களில் மரங்களை வளர்க்க ஒரு விவசாயிக்கு 50 பனங்கொட்டைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
90 சதவீத மானிய விலையில் ஒட்டுப்பொறிகள்
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள் ஹெக்டேருக்கு 20 எண்கள் அடங்கிய தொகுப்பு 90 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேற்கண்ட இந்த அணைத்து திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
படிக்க....
PM கிசான் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி e-kyc முடிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
தமிழக சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமாக ரூ.65,000 வரையில் பெற விண்ணப்பிக்கலாம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...