தமிழக  சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமாக  ரூ.65,000 வரையில் பெற விண்ணப்பிக்கலாம்!!


தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் மற்றும் கூடுதல் வருமானம் பெறவும், குறைந்த நீரில் அதிக பயிர்களை சாகுபடி செய்யவும் பிரதான் மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் இணைந்து கொண்டு பயன்பெறலாம்.


தற்போதைய 2021­-2022 ஆம் காலகட்டத்தில் தமிழக சிறு, குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் போன்றோர் குறைந்தளவு நீர்ப்பாசனத்தை கொண்டு அதிகளவு மகசூல் மற்றும் கூடுதல் வருமானம் பெற உதவும் திட்டமாக பிரதான் மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 



இந்த திட்டத்தின் வாயிலாக பாசன நீரை சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்தி பயிர்களின் வளர்ச்சி பருவங்களுக்கு ஏற்ப பாசன நீரை  செடிகளின் வேர்ப்பகுதிக்கு நேரடியாக வழங்கி மகசூலை பெருக்க வழிவகை செய்கிறது.


சொட்டு நீர்ப் பாசனம் (Drip Irrigation) மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் (Sprinkler) ஆகியவற்றைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக வருமானம் பெற இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


இத்திட்டத்தில் விவசாயிகள் பங்கு பெற்று பயன்பெற பின்வரும் ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்ய வேண்டியது அவசியம். 



  • விவசாயிகளின் புகைப்படம், 


  • குடும்ப அட்டை நகல், 


  • சிட்டா, அடங்கல், நில வரைப்படம், 


  • கிணறுகாண ஆவணம், 


  • நீர் மற்றும் மண் பரிசோதனை ஆவணம், 


  • ஆதார் அட்டை நகல், 


  • வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சிறு, குறு விவசாய சான்றிதழ், 


  • குத்தகைய நிலமாக இருப்பின் 7 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்த பத்திரம்,


  • சொந்த கிணறு இல்லையெனில் அருகில் உள்ள கிணறு உரிமையாளரிடம் இருந்து தண்ணீர் பயன்படுத்திக் கொள்ள சம்மத கடிதம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

 

75% முதல் 100% வரையில் மானியம்


இவ்வாறு சம்மதித்து பின் அவர்களின் விண்ணப்பம் பெறப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவித மானியம் மாநில வேளாண் துறை வாயிலாக வழங்கப்பட்டு, பிரதான் மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெற்று பயன்பெறலாம்.



ரூ.65,000 வரையில் மானியம்


மேலும் இவ்வாறு சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசன கருவிகள் பெற்ற பிறகு மோட்டார் பெற ரூ.15,000, PVC குழாய் அமைக்க ரூ.10,000 மற்றும் நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க ரூ,40,000 வரை மானியங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட விவசாயிகளும் பெறலாம்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


தகவல் வெளியீடு 


முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத் துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.


மேலும் படிக்க....


குறைந்த செலவில், அதிக வருமானத்திற்கு மண்புழு வளர்ப்பு- விவரம் இதோ!!


குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் பெற சூரிய காந்தி சாகுபடி மேலாண்மை முறைகள்!!


விவசாயிகளுக்கு PVC குழாய் மற்றும் மின்சார மோட்டார் வாங்க ரூ.25,000 மானியம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post