அடுத்த பத்து ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்வில் தன்னிறைவு வேளாண் துறை அமைச்சர் நம்பிக்கை!!
பத்து ஆண்டுகளுக்கு பிறகு, விவசாயிகள் கடன் கேட்டு நிற்கும் நிலை இனி இருக்காது. இந்த நிலையை, வேளாண் பட்ஜெட் உருவாக்கும், என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
4,000 ரூபாய் வழங்கவில்லை
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு, அவர் அளித்த பதிலுரை: வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கீரை, நெல், கரும்பு, வாழை என, ஒவ்வொரு விவசாயிகளின் தேவையை அறிந்து, சலுகைகளை வழங்கி உள்ளோம். தி.மு.க., அரசு பொறுப்பேற்று, 10 மாதங்கள் ஆகின்றன. எனவே, 10 மாத குழந்தையாக இந்த பட்ஜெட் உள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும்போது, எந்த வகையிலும் ஒரு விவசாயி கூட கடன் கேட்டு நிற்க மாட்டார்கள் என்ற நிலையை, இந்த பட்ஜெட் உருவாக்கும். அந்த அளவிற்கு தன்னிறைவு பெற்றவர்களாக விவசாயிகளாக மாறி இருப்பர். விவசாயத்திற்கு பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். கரும்பு கொள்முதல் விலையாக, டன்னுக்கு 4,000 ரூபாய் இதுவரையில் வழங்கவில்லை என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, சர்க்கரைத் துறைகளை அவர்கள் சீரழித்து விட்டனர். கரும்புக்கான நிலுவைத் தொகை, 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கரும்பு சாகுபடி
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு, 69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனால், 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. குறுவை சாகுபடி பரப்பு, 1.50 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது; கரும்பு சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக, புதிய புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். உரம் கிடைக்கவில்லை என பேசினர்.
இந்தஆண்டுக்கு தேவையான உரங்கள் உள்ளன. இரண்டு முறை, மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இதனால், தேவைக்கான உரங்கள் வருகின்றன. மேலும் இரவு நேரங்களில், 'பம்ப் மோட்டார்' களை இயக்க செல்லும் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, மொபைல் போன் வழியாக, பம்ப் மோட்டார்களை இயக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உழவர் சந்தைகள் தேவையான இடங்களில் துவங்கப்பட்டு வருகின்றன. அனைத்து எம்.எல். ஏ.,க்களும் வேளாண் பட்ஜெட்டை பாராட்டிஉள்ளனர். இதுதான் இந்த பட்ஜெட்டின் வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
படிக்க....
குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் பெற சூரிய காந்தி சாகுபடி மேலாண்மை முறைகள்!!
“கிசான் ட்ரோன்” திட்டத்தின் கீழ் வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம் அமைச்சர் அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...