Pm Kisan செயலியில் புதிய விவசாயிகள் பதிவு செய்ய விரைவாக இதனை செய்யுங்கள்!!


பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஒரு தவணைக்கு ரூ. 2000 என மொத்தம் 3 தவணைகளாக ஒரு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவும் வைக்கப்படுகிறது.


இதனிடையே பிரதமரின் கிசான் திட்டத்தில் புதிய விவசாயிகள் இந்தாண்டு பதிவு செய்ய முடியாமல் திணறி வந்தனர். Pm Kisan என்ற தொலைபேசி செயலி மூலமாக புதிய விவசாயிகள் ஆதார் எண் மூலம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.



தற்காலிகமாக இந்த செயலி முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி வருவதால் புதிய விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம், மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர். 



கடந்த 2018 ஆம் ஆண்டு Pm Kisan திட்டத்தில் போலியாக விவசாயிகள் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தால் Pm Kisan திட்டத்தில் பல்வேறு வகையான குளறுபடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன.


இந்நிலையில் இது குறித்து ஊடக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடலூர் வேளாண் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார். 



அதில், கடலூர் மாவட்டத்தில் Pm Kisan திட்டத்தில் புதிய விவசாயிகள் சேர இணையதளம் மூலம் பதிவு செய்யும் பொழுது பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது பதிவு செய்ய இயலவில்லை என்றாலோ உடனடியாக கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக வரவும் என கூறியுள்ளார்.


மேலும் இத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 816 விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த முறை வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே பிரதமரின் Pm Kisan திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரூ. 2000 பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இணைக்கவில்லை எனில் பணம் வராது என தெரிவித்தார்.



கடலூர் மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரத்து 958 கிசான் வாடிக்கையாளர்கள் இதுவரையில் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்காமல் உள்ளனர். எனவே இந்த மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் இல்லை என்றால் 11வது தவணையில் சிக்கல்கள் ஏற்படும் என கூறினார்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


அடுத்த பத்து ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்வில் தன்னிறைவு வேளாண் துறை அமைச்சர் நம்பிக்கை!!


தமிழக சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமாக ரூ.65,000 வரையில் பெற விண்ணப்பிக்கலாம்!!


தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post