PM Kissan இதுதான் கடைசி வாய்ப்பு மே 31 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு!!


இதைச் செய்யாவிட்டால், ரூ.6000 கிடைக்காது!


மத்திய அரசு திட்டமான Pm Kisan மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ. 6000  நிதியுதவிப் பெற வேண்டும் என்றால், இதை உடனே செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பணம் கிடைக்காது. எனவே கிசான் வாடிக்கையாளர்கள் உடனடியாக இதனைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6000 கௌரவ நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என மூன்று தவணைகளாக தலா ரூ.2000 என பிரித்து வழங்கப்படுகிறது.



இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை புதுப்பிப்க்கவும்


இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11ஆவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. ஆகையால் பதிவுசெய்த விவசாயிகள் அனைவரும் அடுத்த தவணைக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை புதுப்பிப்க்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மே 31ஆம் தேதி வரையில் கால அவகாசம்


அவ்வாறு சரிபார்ப்பை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் முடியும் இந்த வேளையில், அதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, மே 31ஆம் தேதி வரையில் விவசாயிகள் இந்த வேலையை செய்து முடிக்கலாம். இதற்கு முன்னர் மார்ச் 31தான் கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்திருந்தது.



மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த இ-கேஒய்சியை (e-KYC) முடிக்க முடியாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கால அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

விவசாயிகள் இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை முடிப்பது என்பது சுலபமான காரியம்தான். pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்றாலே அதற்கான வசதி இருக்கும். அல்லது இந்த காணொளி வாயிலாக நீங்களே மிக எளிமையாக வீட்டில் இருந்தபடியே இதனை செய்யலாம்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 



மோசடியைத் தடுக்கும் விதமாகவும், சரியான பயனாளிகளுக்கு நிதியுதவி சென்று சேரவேண்டும் என்பதற்காகவும் இ-கேஒய்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 

மேலும் படிக்க....


Pm Kisan செயலியில் புதிய விவசாயிகள் பதிவு செய்ய விரைவாக இதனை செய்யுங்கள்!!


அடுத்த பத்து ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்வில் தன்னிறைவு வேளாண் துறை அமைச்சர் நம்பிக்கை!!


தமிழக சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமாக ரூ.65,000 வரையில் பெற விண்ணப்பிக்கலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post