வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொகுப்புகள் வழங்கும் திட்டம்!!


மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் கூட்ட நிறுவனம் மற்றும் வேளாண் அறிவியல் மையம் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வரும் பயறுவகை பயிர்களில் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப செயல்விளக்கத் திடலை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனீஷ் சேகர், பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.



அந்த வகையில், நெல் தரிசில் பயறு சாகுபடியை (உளுந்து / பச்சைபயிறு) விவசாயிகளிடத்தில் ஊக்கப்படுத்திடும் நோக்கில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.


இந்த திட்டத்தை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் நெல் தரிசில், உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்கள் 11 லட்சம் ஏக்கரில் பயிரிடுவதற்கு இவ்ஆண்டு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்ய தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான்கள், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் தார்ப்பாய்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகிறது. 



மேலும், சாகுபடி செய்யப்பட்ட பயறு வகைப் பயிர்களை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


நெல் தரிசில் பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதின் மூலம் மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது.


இதனை ஊக்கப்படுத்த மதுரை மாவட்டத்தில் பயறுவகை பயிர்களில் உற்பத்தியை அதிகரித்திடும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் கூட்ட நிறுவனம் மற்றும் வேளாண் அறிவியல் மையம் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப செயல் விளக்கம் நடத்தப்பட்டது. 



இந்த நிகழ்வில், விவசாயிகளுக்கு ஆடுதுறை 6, வம்பன் 8 மற்றும் வம்பன் 11 ஆகிய இரகங்களின் இயந்திரத்தின் மூலம் விதையிடுதல், சொட்டு நீர் பாசனம் போன்ற தொழில் நுட்பங்கள் குறித்தும், உரச் செலவினை குறைத்து பயன்பாட்டுத் திறனை அதிகரித்திட நானோ யூரியா, டிரோன் பயன்படுத்துதல் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.


மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பனைமரங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் 22,245 பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் ரூ.84,531/- மதிப்பீட்டில் நடவு செய்யப்பட்டு பனை மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 


மேலும் வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கடப்பாரை, இடும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர் அரிவாள் உள்ளிட்ட வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 



இத்திட்டத்தின் மூலமாக இந்த மாவட்டத்தில் இதுவரை 1,634 வேளாண் குடும்பங்கள் ரூ.32,27,300/- செலவில் வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பை நினைவில்கொண்டு, தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக 855 விவசாயிகளுக்கு 1,81,150 மரக்கன்றுகள் ரூ.27,17,250 லட்சம் செலவில் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். 





வேளாண் திட்டப்பணிகளையும், விவசாயிகள் நலனையும் பாதுகாக்கும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இத்திட்டங்கள் அனைத்தும் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெ.விவேகானந்தன் உட்பட வேளாண்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்க....


PM Kissan இதுதான் கடைசி வாய்ப்பு மே 31 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு!!


Pm Kisan செயலியில் புதிய விவசாயிகள் பதிவு செய்ய விரைவாக இதனை செய்யுங்கள்!!


அடுத்த பத்து ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்வில் தன்னிறைவு வேளாண் துறை அமைச்சர் நம்பிக்கை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post