கோழி பண்ணை அமைக்க 50% மானியத்தில் ரூ.45,750 வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு!!
சிறு வயதினர் முதல் அசைவப் பிரியர்கள் வரை அனைவரையும் தன் சுவையால் கட்டிப் போட்டுவைத்திருப்பது எதுவென்றால், அது கோழிதான். அதில் பிராய்லர் கோழி, நாட்டுக்கோழி என இரண்டு வகைகள் உள்ளன.
இதில் பிராய்லர் கோழி உடலுக்கு பல தீமைகளை விளைவிப்பதாக மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். எனவே பெரும்பாலோனோர் தற்போது நாட்டுக் கோழியை விரும்ப தொடங்கி உள்ளனர்.
எனவே உடலுக்கு நன்மை தரும் நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது, நமக்கு அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளது. அவ்வாறு ஆடு, கோழி வளர்ப்போரை ஊக்குவிக்க அரசும் பல்வேறு மானியங்களையும் வழங்குகிறது.
கோழி வளர்ப்போரை ஊக்குவிக்க 50% மானியம்
தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25% சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த திட்டத்தை பற்றிய முழு விபரங்களையும் அறிந்துகொள்ள விரும்பினால் உடனே தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம். மேலும் அவரிடம் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தையும் மற்றும் விரிவான விளக்கத்தையும் பெறவும். தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் இந்த திட்டம் தற்போது படிப்படியாக செயல்படுபட்டு வருகிறது.
ஒரு பயனாளிக்கு ரூ.45,750 வரை மானியம்
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படம் நிதியின் அளவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இதைத்தவிர நபார்டு வங்கியின் மூலமாக 25% சதவிகித மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 25% சதவிகிதமும் இறுதியாக நபார்டு வங்கி மூலம் 25% சதவிகிதமும் மானியமாக வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு ரூ.45,750 வரை மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50% சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும்.
தகுதியுடைய பயனாளிகள் யார்? யார்?
விவசாயிகள், தனிநபர்கள், தொழில் முனைவோர்கள், சுய உதவிக்குழுக்கள் போன்றவர்கள் இந்த மானியத்தை பெறத் தகுதியானவர்கள். நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பதாரர் பெயரிலோ அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ பண்ணை அமைக்க போதுமான இடம் இருக்க வேண்டும்.
கோழி வளர்ப்பில் முன் அனுபவம் வாய்ந்தவர்கள், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவர்களிடம் பண்ணைகள் அமைக்கப் போதுமான இடம் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே கொட்டகை அமைத்து கோழி வளர்க்கும் பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும் கோழிப் பண்ணைகளை விரிவாக்கம் செய்து கொள்ள ஆர்வமும் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்புகள் உள்ளன.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் மூலமாக 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.
எனவே, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிலத்திற்கான ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும்
படிக்க....
PM Kissan இதுதான் கடைசி வாய்ப்பு மே 31 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு!!
Pm Kisan செயலியில் புதிய விவசாயிகள் பதிவு செய்ய விரைவாக இதனை செய்யுங்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...