“கிசான் ட்ரோன்” திட்டத்தின் கீழ் வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம் அமைச்சர் அறிவிப்பு!!
வேளாண்மையில் ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து இடுபொருட்களை துல்லியமாக பயன்படுத்த ட்ரோன் தொழில்நுட்ப கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 - 23 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று (சனிக்கிழமை) பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், பல்கலைக்கழகங்கள் பாடங்களைப் போதிப்பதற்காக மட்டும் அல்ல, ஆய்வுகளின் மூலமாகச் சாதிப்பதற்காகவும்தான்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது வேளாண் துறைக்கும், ஆய்வு நெறிக்கும் ஒரு பாலமாக அமைந்து செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் வாயிலாக வரும் நிதியாண்டில் பின்வரும் திட்டங்கள்
செயல்படுத்தப்பட உள்ளன.
ட்ரோன் தொழில்நுட்பம் வேளாண்மையில் ஆள் பற்றாக்குறையை சமாளித்து இடுபொருட்களை துல்லியமாக தெளித்து தமிழக வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், வேளாண் பயிற்சி நிலையங்களில் ட்ரோன் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2022-23 ஆம் நிதி ஆண்டில் ஒன்றிய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கல் மற்றும் “கிசான் ட்ரோன்” திட்டத்தின் கீழ் 10 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 60 ட்ரோன்களின் மூலம் சுமார் 14,400 எக்டர் பரப்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் செயல் விளக்கம் மேற்கொள்ளப்படும்.
விதைச்சான்று, அங்ககச் சான்றளிப்பு விதைகளே வீரியமான விவசாயத்திற்கு மூலதனமாகும். உழவர்களுக்கு விளைச்சலை அதிகரிக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள, வறட்சியைத் தாங்கக்கூடிய சக்தி கொண்ட, வெள்ளத்திலும் அழுகாத தன்மை கொண்ட விதைகளை உற்பத்தி செய்து அளிப்பதன் மூலம் மகசூல் அதிகரிக்கவும், உற்பத்தி பெருகவும் வழிவகுக்கும் செய்கையை இத்துறை செயலாற்றி வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகமானது, தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில்
ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து
விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்றார்.
மேலும்
படிக்க....
நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி ஊக்குவிப்பு! விதைகள் மானியத்தில் வழங்கப்படும்!!
5 ஆயிரம் விவசாயிகளுக்கு புதியதாக மின்மோட்டாா் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...