5 ஆயிரம் விவசாயிகளுக்கு புதியதாக மின்மோட்டாா் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்!!



5 ஆயிரம் விவசாயிகளுக்கு புதியதாக மின்மோட்டாா் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்!!


விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் பெற்று வருவாயை அதிகரிக்க 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். 


வளர்ந்து வரும் இளைஞா்களை விவசாய தொழிலில் ஈா்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோா்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் மூலமாக கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைத்து தரப்படும். 



இவற்றில் கரும்பு சாகுபடிக்கு உதவும் வகையில் உயா்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் போன்றவைகளை உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும். 


இது தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத நிலையில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப் பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.800 வீதம், அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை மானியங்கள்வழங்கப்படும். 


இதன் மூலம் 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமாா் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 10 கோடி மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்படும். இத்திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.150 கோடி மத்திய, மாநில அரசினால் ஒதுக்கப்படும்.



சூரிய சக்தி பம்புசெட்டுகள்


தமிழக முதல்வரின் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தில் நடப்பாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான தனித்து சூரிய சக்தியால் இயங்கும் 3,000 பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் ரூ.65.34 கோடியில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.


சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், இதர வேளாண் விளைபொருள்களைத் தரம் பிரித்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக வருவாய்  பெறும் வகையில், சுமார் 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்குவதற்கு ரூ.5 கோடி மத்திய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 


விவசாயிகளும், விவசாயக் குழுக்களும் அதிக வருவாய் பெற்றிடும் நோக்கில் பசுமைக் குடில் உள்ளிட்ட 145 சூரிய கூடார உலா்த்திகளை 40 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் நடப்பாண்டில் ரூ. 3 கோடியில் மத்திய, மாநில அரசு செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.



பராமரிப்பு மையங்கள்


விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் போன்றவற்றை கால தாமதமின்றி அவா்களின் இருப்பிடத்திலேயே பழுதுநீக்கிப் பராமரிக்கவும், வேளாண் பொறியியலில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற இளைஞா்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும் வகையில், 


இந்த நிதியாண்டில் தலா ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 50% சதவீத மானியத்துடன் 25 வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் ஆகியவற்றைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் ரூ.1 கோடியில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அமைத்து தரப்படும். 


மின்மோட்டாா் மானியம்


விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டாா் பம்புசெட்டுகள் வாங்கிடவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டாா் பம்புசெட்டுகள் பொருத்திடவும்,



தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் 5 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின்மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டாா் பம்பு செட்டுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வீதம் மொத்தம் ரூ.5 கோடி மத்திய, மாநில, அரசு நிதியில் இருந்து வழங்கப்படும்.


மேலும் படிக்க....


நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி ஊக்குவிப்பு! விதைகள் மானியத்தில் வழங்கப்படும்!!


மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் தமிழக அரசு அறிவிப்பு!


தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments