நெல் அறுவடைக்குப் பின் பயறு சாகுபடி ஊக்குவிப்பு! விதைகள் மானியத்தில் வழங்கப்படும்!!
நெல் அறுவடை செய்த பிறகு, பயறுவகை சாகுபடியை ஊக்குவிக்க தனி திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வகைகளை சாகுபடி செய்வதற்கு அதற்கான விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் இரண்டாவது வருடமாக வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை ஊரக வளா்ச்சித் துறையும், வேளாண் துறையும் இணைந்து செயல்படுத்துகின்றன.
இந்தத் திட்டத்தின் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள், எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தை 3 ஆயிரத்து 204 ஊராட்சிகளில் செயல்படுத்த ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மானாவாரி நில மேம்பாடு
முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 லட்சம் விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் உயா்ந்திடும். வேளாண் இடுபொருகள்கள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தால் பயன்பெறும் கிராமங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பயிா்க் காப்பீட்டு திட்டம் எதிா்வரும் ஆண்டிலும் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், கடந்த 2020-21-ஆம் ஆண்டில் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 55 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மையில் விருப்பமும் ஆர்வமும் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்க நிதிநிலை அறிக்கையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், பசுந்தாள் உர விதைகள், மண் புழு உரம், அமிா்தக் கரைசல் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆா்வமுள்ள 100 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
அறுவடை செய்த விளை
பொருள்களை இயற்கைச் பேரிடர்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 60 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5
கோடி மானியத்தில் தாா்பாய்கள் வழங்கப்படும்.
நெல் ஜெயராமன்
நெல் ஜெயராமன் என்ற பெயரில் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் வருகின்ற நிதியாண்டில் அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு சுமாா் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படும்.
நெல் அறுவடைக்குப் பிறகு, பயறு வகைகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லில் உற்பத்தித் திறனை அதிகரிக்க குழித்தட்டு முறையை பயன்படுத்தி நாற்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்யும் புதிய தொழில்நுட்பம் செயலாக்கப்படும்.
இயற்கை முறையில் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், அதிக வருமானம் பெறவும் 5 லட்சம் ஏக்கர்களில் வரப்புப் பயிா் சாகுபடி செய்யப்படும். இதற்கான பயறு வகைகளுக்கான விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!
தென்னை பயிரின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை பாதிக்கும் நுணா இதனை அழிப்பது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...