தென்னை பயிரின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை பாதிக்கும் நுணா இதனை அழிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறைந்த விலை, அதிக கூலி, ஆட்கள் பற்றாக்குறை, பாரம்பரிய வகை மற்றும் வயதான மரங்கள், களைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.
தென்னை தோப்புகளானது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும், அறிவியல் பயிர் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றத் தவறியதன் விளைவுதான் மகசூல் இழப்பு ஆகும் .
தென்னைந்தோப்புக்கு அடியில் பயன்படுத்தப்படாத இடங்களில் களைகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. இத்தகைய களைகள் மண்ணின் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்காக தென்னையுடன் போட்டியிட்டு தென்னை பயிரின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை பாதிக்கின்றது.
தென்னையின் மொத்த உற்பத்தி செலவில் களை கட்டுப்பாட்டு செலவு 20% ஆகும், இது தேங்காய் லாபத்தை கணிசமாகக் குறைக்கிறது. பராமரிப்பின்றி காணப்படும் தென்னந்தோப்புகளில் அதிகமாக பாதிப்புக்குளாக்குபவை நுணா களையாகும்.
தமிழகமெங்கும் காணப்படும் சீமைக் கருவேலிற்கு அடுத்தப்படியாக, கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரும் மரமே நுணா. இது சுமாரான உயரமுடைய மரம் அதாவது 6-10 மீட்டர் உயரம் வரைவளரும். இலைகள் 15 செ.மீ நீள முடையவை, பூக்கள் 1.5 செ.மீ அளவுள்ள வெள்ளை நிறப்பூக்கள், மார்ச் – ஜீன் மாதங்களில் பூக்கும். காய்கள் பச்சை நிறத்தில் நான்கு முனைகளுடன் உருவாகும் பழுத்த நிலையில் கருப்பு நிறம் பெறும், 2 செ.மீ அளவுடையவை.
இவைவிதையால் பரவக்கூடியவை என்பதால் ஆனி வேர் கொண்ட களையாகும். இதனைஅழிப்பது சிரமம் இந்த செடியை தரையை ஒட்டிவெட்டினாலும், மூன்றுவாரங்களில் துளிர் விட்டுவிடும். இவை முக்கியமாக, தென்னை வேர் இடுக்குகளில் நன்றாக வேர் ஊன்றி தென்னைக்கு கிடைக்க வேண்டிய நீர் மற்றும் உரத்தை உட்கொண்டு தென்னை மகசூலை வெகுவாக பாதிக்கிறது.
தஞ்சைமாவட்டத்தில் தென்னந் தோப்புகளில் மட்டுமின்றி வயல்களிலும் இவை அதிகபாதிப்பை தருகிறது. நிலப்பரப்பில் தேவையற்ற மரத்தாலான தண்டுகள் கொண்ட தாவரங்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்ற செயலாகிவிடும்.
தேவையற்ற மரங்கள் மற்றும் புதர்களுக்கு எதிராகஅறுக்கும் இயந்திரங்கள், செயின்சாக்கள் மற்றும் கோடாரிகள் பயனற்றதாக மாறும் போது, களைக்கொல்லிகளின் பயன்பாடு பெரும்பாலும் அவற்றின் கட்டுப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ள மற்றும் மலிவான வழி முறையாகும்.
ஆக்கிரமிப்பு தாவரங்களுக்கு களைக்கொல்லிகள் கொன்டு சிகிச்சையளிப்பதற்கு பல்வேறு பயன்பாட்டு முறைகள் உள்ளன. எனவே உங்கள் குறிப்பிட்ட களை பிரச்சனைக்கு நீங்கள் பயன்படுத்தும் களைக் கொல்லிகளின் வகைகளுக்கும் சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
நுணா செடியினை இனைகளைகொல்லி மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். இதனை கட்டுப்படுத்த கீழ்க்காணும் செயல்முறையை பின்பற்றி முற்றிலும் அழித்துவிட முடியும்.
மர தேர்வு
இந்த சிகிச்சையானது ஆறு அங்குல விட்டம் கொண்ட சிறிய தண்டு செடிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவற்றின் விட்டம் அதிகரிக்கும் போது மரங்களின் மீது குறைவான செயல்திறன் கொண்டது.
அடிதள பட்டை நீக்குதல்
ஒரு அடித்தள பட்டைகளைக் கொல்லியானது ஊடுருவியும் ஒரு களைக் கொல்லி ஆகும். இந்தகளைக் கொல்லியானது நீர்கலவையுடன் இணைந்து கலவை நேரடியாக நிற்கும் மரத்தின் பட்டை மீது பயன்படுத்தப்படுகிறது.
தாவரங்களில் புளோயம் என்பது வாஸ்குலர் வாழும் திசு ஆகும். இது ஒளிச் சேர்க்கையின் போது கரையக்கூடிய கரிமசேர்மங்களை தாவரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு தேவையான இடங்களில் கொண்டுசெல்கிறது. இந்த போக்குவரத்து செயல்முறை இடமாற்றம் என்ற அழைக்கப்படுகிறது.
சைலத்தின்-இன் அடிப்படை செயல்பாடானது வேர்களிலிருந்து, தண்டுகள் மற்றும் இலைகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதாகும். பொதுவாக மரத்தாலான செடியில் இருந்து பட்டைவளையம் அகற்றப்படும் போது மரத்தாலான சைலம் பகுதி அப்படியே இருக்கும்,
இதனால் நீர் மற்றும் உட்டசத்துக்கள் இலைகளை அடையும். மரத்திலிருந்து பட்டை வளையத்தை (புளோயம்) அகற்றுவதனால் இந்த செயல் முறையானது கிர்ட்லிங் எனப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது ஒளிச் சேர்க்கைகள் இடுப்புப் பகுதிக்கு சற்று மேலே குவிந்து, இடுப்புக்கு கீழே உள்ள மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை.
மேலும் டிரான்ஸ்பிரேஷன் என்பது நீர் மூலக் கூறுகள் வேர்களில் இருந்து மேல் நோக்கி நகர்ந்து இறுதியில் நீராவி வடிவில் இலைகளின் ஸடோமாட்டாவிலிருந்து வெளியேறும் செயல் முறையாகும்.
ஒரு நீர் மூலக்கூறு ஸ்டோமாட்டா வழியா கவளிமண்டலத்தில் வெளியேறும் போது, அது அதன் இடத்தைப் பிடிக்க கீழே உள்ள நீர் மூலக்கூறை இழுக்கிறது. ஊட்டச்சத்து விநியோகம் துண்டிக்கப்படுவதால், வேர்கள் இறக்கின்றன, மீத முள்ள தாவரபாகங்கள் தண்ணீர் இல்லாததால் விரைவாக இறக்கின்றன.
களைக்கொல்லி
2, 4-னுடைக்ளோரோபெனாக்சிஅசிடிக் அமிலம் (2, 4-னு) வணிக ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் செயற்கைகளைக் கொல்லியாகும், பரந்த இலைகள் கொண்ட தாவரங்களுக்கு இது 60 ஆண்டுகளுக்கும் மேலாக களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட களைக் கொல்லியாகும், இது மோனோகாட்களைப் பாதிக்காமல் டைகாட்களைக் கொல்லும் மற்றும் மூலக்கூறு மட்டத்தில் இயற்கையானஆக்சினைப் பிரதிபலிக்கிறது. ஆக்சினிக் களைக் கொல்லிகளுக்கு உணர்திறன் கொண்ட டைகாட்களின் உடலியல் விளைவானது அசாதாரண வளர்ச்சி, முதுமை மற்றும் தாவர இறப்பு ஆகியவை அடங்கும்.
2, 4-னுநீர் மற்றும் ஊட்டச்சத்துக் களை எடுத்துச் செல்லும் திசுக்களில் உள்ள செல்கள் பிரிந்து நிற்காமல் வளரச் செய்வதன் மூலம் தாவரங்களைக் கொல்லும் 2, 4-னுயின்அரை ஆயுள் காலம் 14 நாட்கள் ஆகும்.
வண்ணப் பூச்சு வடிவம்
தூள் வடிவில் அனைத்து பூச்சி மருந்து கடையிலும் கிடைக்கும். இது பரந்த இலைகள் கொண்ட தாவரங்களுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் களைக் கொல்லியாகும். ஒரு கொள்கலனில் 500 கிராம் 2, 4-னு எடுத்து மெதுவாக 250 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு தூரிகை மூலம் கிளறவும்.
தூள் முழுவதுமாக கரைந்து பேஸ்ட் வடிவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம், ஏனெனில் அதுநறுக்கப்பட்ட தண்டில் ஒட்டாது. இந்த பேஸ்ட்டை தண்டு நறுக்கப்படுவதற்கு சற்று முன்பு தயாரிக்க வேண்டும்.
ஏனெனில் அதை 4 மணிநேரம்கூடசேமிக்க இயலாது. ஏனெனில், அது அதன் இரசாயன பண்புகளை இழக்கும். இதனை தயார் செய்யும் பொழுதும், தண்டில் தடவும் பொழுதும் கையுறைகள் மற்றும் முகமூடி அணிய வேண்டும். மேலும் உபயோகிக்கப்பட்ட பெயின்ட் பிரஷ் மூலமும் இதை தடவலாம்.
பயன்படுத்தும் முறை
முதலில் முதிர்ச்சியடைந்த பட்டை கொண்ட நுணா செடியைத் தேர்ந்தெடுக்கவும் இளம் தளிர்களில் பச்சைநிறபட்டை இருக்கும் மற்றும் முதிர்ந்தவற்றில் மஞ்சள் முதல் பழுப்பு நிறபட்டை இருக்கும் தரையில் இருந்து ஒரு அடிக்கு மேல் கூர்மையான கத்தியால் 1 அங்குலம் அகலம் வரை செடியின் பட்டையை எடுக்கவும்.
பட்டையை அகற்ற ஒரு அங்குல அகலத்தின் இரு முனைகளிலும், ஒரு வளைய வடிவத்தை வெட்டுங்கள் மோதிரவடிவத்தின் மையத்தில், இரு முனைகளையும் சந்திக்கும் வரை நேராக வெட்டி எடுக்கவும். பின்னர் மெதுவாக தண்டை விட்டு பட்டையை பிசிரு இல்லாமல் உரிக்கவும்.
இப்போது புதிதாக தயாரிக்கப்பட்ட 2,4-னு கலவையை பட்டை அகற்றப்பட்ட பகுதியில் தூரிகை உதவியுடன் தடவவும். 500 கிராம் கொண்ட 2,4-னு கலவையினை 100 நுணா செடிகளுக்கு பயன்படுத்த முடியும்.
களைக்கொல்லியைப் பயன்படுத்திய 3 முதல் 4 நாட்களுக்குள் செடிகள் வாடும் அறிகுறிகளைக் காட்டும் மேலும் 15வது நாள் முடிவில் இலைகள் முற்றிலும் காய்ந்து விடும்.
பின்செய் நேர்த்தி
அடுத்த சில மாதங்களில் புதிய தளிர்கள் பட்டை அகற்றிய பகுதிக்கு அடியில் வளரும் இப்போது மீண்டும் அதே நடைமுறையை 3 முனைகளுக்குக் கீழே பயன்படுத்தவும் அனைத்து இளம் மொட்;டுகளையும் அகற்றி அனைத்து முனைகளிலும் தடவவும்.
பின்னர் தாவரங்கள் புதியவளர்ச்சி இல்லாமல் முற்றிலும் காய்ந்துவிடும். இந்த களையை மட்டும் நீக்கினால் இந்த முறை தென்னை மரங்களை பக்கவிளைவு இன்றி காப்பாற்றும்.
தென்னையில் உள்ள நுணாவை அகற்றவேறு எளிதாக வழி இல்லை. இது பற்றிய செய் முறைவிளக்கம் மற்றும் இதர சந்தேகங்களுக்கு வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
தகவல் வெளியீடு
முனைவர்கள் இரா.அருண்குமார், ம.சுருளிராஜன் மற்றும் இரா.பாபு, தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் 614 906, தஞ்சாவூர் மாவட்டம், Mobile : 89036 06089, Email : arsvpm@tnau.ac.in
மேலும்
படிக்க....
தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!
நெற் பயிரில் பச்சைபாசி பரவுதலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்!!
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறும் வானிலை மையம் எச்சரிக்கை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...