உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறும் வானிலை மையம் எச்சரிக்கை!!

 


உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாறும் வானிலை மையம் எச்சரிக்கை!!


தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி வரும் 21ம் தேதி புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


நேற்று (மார்ச் 16) காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. தற்போது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19ம் தேதி காலை வரையில் நிலவும்.



புதிய புயல்


வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். வருகின்ற 21ம் தேதி இது புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22ம் தேதி காலை நிலைபெற்று இருக்கும்.

 

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.



இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கூடும்.

 

இன்று முதல் நாளை வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கக்கூடும்.

 

கடந்த 24 மணி நேரத்தில் மழைபொழிவானது கன்னியாகுமரி மாவட்டத்தின் சூரளகோடில் 5 செ.மீ., மழையும், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை பகுதிகளில் தலா 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

 


மீனவர்களுக்கான எச்சரிக்கை


இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க....


 தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 2022: முக்கிய அம்சங்கள்!!


விவசாயிகளையும் விவசாயத்தையும் ஊக்குவிக விவசாயிகளுக்கு 8 வகை மானியம்!


3000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் LPG மானியம் கிடைக்காது! LPG மானியம் ரூ.237!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments