மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் தமிழக அரசு அறிவிப்பு!
மார்ச்
31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க
நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் அடகு வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை ஸ்டாலின் அரசு நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தள்ளுபடித் தொகையினை அரசு முன்கூட்டியேச் செலுத்தாவிட்டால், நகைக்கடனைத் தள்ளுபடி செய்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் நிலவுகின்றது.
இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முயற்சியையும் அரசு செய்து வருகிறது. இவ்வேளையில், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி,
14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31-ம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும்
என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நகை கடன் தள்ளுபடிக்கான புதிய நிபந்தனைகள்
நகைக்கடனை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது. 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் கூட, தள்ளுபடி கிடையாது. அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு சங்கத்தில் பணியில் இருபவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
ஆதார் எண்ணைத் தவறாக வழங்கியவர்கள், ரேசன் அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை வைத்திருப்பவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. அரசு விழாவில் தகுதியான 25% சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும்.
மேலும் படிக்க....
நெற் பயிரில் பச்சைபாசி பரவுதலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்!!
தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!
தமிழக பட்ஜெட் 2022-23 தமிழக அரசின் 2022-23ம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும்
நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன்
அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த
லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...